
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் உயரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் தங்கும். வேலையில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. சண்டை போடக்கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள். வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சௌகரியமான வாரமாகத் தான் இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். மற்றபடி உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகாத உணவு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புது வேலை, புது வீடு, புது வியாபாரம் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். அஷ்டலட்சுமிகளை வழிபடுங்கள் நன்மை நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசான அலைச்சல் இருக்கும். கஷ்டப்பட்டு எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய சூழ்நிலை வரும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் அயராத உழைத்து உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். இறைவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கிறது. கூடுமானவரை அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். நரசிம்மர் வழிபாடு நன்மையை தரும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்த வாரமாக இருக்கும். எதிலும் நீங்கள் பொறுப்போடு நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு இருக்கும் கடமைகளை சரியாக நிறைவு செய்வீர்கள். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சாப்பாட்டு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். தினமும் ஹனுமன் வழிபாடு செய்வது நல்லது. – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற மன குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். புது முடிவுகளை எடுப்பதாக இருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அகல கால் வைக்க வேண்டாம். தெரியாத நபர்களோடு அதிகம் பழக வேண்டாம். வேலை வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். புது முடிவுகளை எடுப்பதாக இருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். தெரியாத நபர்களோடு அதிகம் பழக வேண்டாம். தினமும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடந்தாலும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம் இது. யாராவது தேவையில்லாமல் உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மீது பொறாமைப்படுவார்கள், கண் திருஷ்டி வைப்பார்கள், இதனாலையே பிரச்சனை வரும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களோடு சக வியாபாரிகளோடு அனுசரித்து செல்லுங்கள் இந்த வாரம் உங்களுக்கு எல்லா விஷயத்திலும் அனுசரணை தேவை. செவ்வாய்க்கிழமையில் முருகனை கும்பிடுங்கள் நல்லது நடக்கும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். நட்பு வட்டாரத்தின் மூலம் நன்மை நடக்கும். தினமும் உங்கள் வேலையை துவங்குவதற்கு முன்பு ஈசனை கும்பிட்டுக் கொள்ளுங்கள்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் பொறுமையாக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்கக் கூடாது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு விட்டுக் கொடுத்த நடக்க வேண்டும். உடன் பிறந்தவர்களோடு சண்டை வேண்டாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். தினமும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கேற்ற செலவு வரிசை கட்டி நிற்கும். இந்த மாதம் வருமானம் வந்தது போல தான் இருக்கும். ஆனால் கையில் இருந்த பணம் எங்கே சென்றது என்று தெரியாது. ஆகவே நிதி நிலைமையில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். வேளையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை பொருத்தவரை சில பிரச்சனைகள் வந்து போனாலும், நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வியாழக்கிழமை குரு வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை பளு அலைச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். நேரத்திற்கு சாப்பிட முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு தூங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கியத்தையும் ஒரு பக்கம் பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு உழைத்தாலும் சில பேருக்கு நல்ல பெயர் கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். கூடுமானவரை இந்த வார இறுதிக்குள் உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். கடமையை மட்டும் செய்யுங்கள். கவலை வேண்டாம். பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வான். தினமும் இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்துவிட்டு பிறகு உங்கள் நாளை துவங்குங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதிருப்தியான வாரமாக இருக்கப் போகிறது. உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றி விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றியின் பாதையில் பயணம் செய்ய கடவுள் உங்களுக்கு நல்ல வழியை காட்டிக் கொடுப்பான். குடும்பத்தில் இருந்து வந்த சட்டை சச்சரவுகள் சரியாகும். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்கு உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். சொத்து சுகமாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் ஊர் கிராம தேவியை வழிபடங்கள் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். ஓடி ஓடி உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகளும் உண்டாகும். தினமும் பிள்ளையாருக்கு விளக்கு போடுங்க. பிரச்சனைகள் விளக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam