நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 05 ஏப்ரல் 2026

இன்றைய ராசிபலன் – 05 ஏப்ரல் 2026


– விளம்பரம் –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். குடும்ப ஒற்றுமையால் மனதில் மகிழ்ச்சி நிலவும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பு தேவை. தாமதமாக எந்த ஒரு வேலையையும் துவங்காதீர்கள். முக்கியமான சந்திப்பு, அப்பாயிண்ட்மெண்ட் ஏதாவது இருந்தால் முன்கூட்டியே அந்த இடத்திற்கு செல்வது மிகவும் நல்லது. உங்களுடைய பொறுப்புகளை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

– விளம்பரம் –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை ஏற்படும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நிதானத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும். தெரியாத நபர் சொல்லும் பேச்சை கேட்க வேண்டாம். தெரியாத மனிதர்களை நம்ப வேண்டாம். கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உங்களுடைய பிரச்சனைகளை உடன் இருப்பவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள், மனதிற்கு ஆறுதல் தரும் விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

– விளம்பரம் –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று கொஞ்சம் ஓய்வு தேவை. உடல் உபாதைகள், உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பின்னடைவு வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுடைய எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து தடைகள் விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

– விளம்பரம் –

துலாம்

துலாம் ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று மன வருத்தம் கொஞ்சம் இருக்கும். முன்கோபம் வெளிப்படும். செய்த தவறை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். மனதளவில் பாதிக்கப்படுவதால், வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். கவனமாக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தியானம் செய்யுங்கள். மன அமைதி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பலன்கள் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வங்கி கடன் முயற்சி செய்யலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக்கொள்வீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை தேடி இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். இரவு நல்ல தூக்கமும் வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெயில் நேரத்தில் வெளியே செல்லாதீர்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்களுக்கு வேலை உண்டு என்று இருப்பீர்கள். பிரச்சனைகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். பிரச்சனைகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். ஆனால் சத்தம் இல்லாமல் அந்த பதிலடி இருக்கும் என்பதுதான், எதிரிகளுக்கு நீங்கள் வைக்கும் செக். திறமை அதிக அளவில் வெளிப்படும் நாள் இன்று.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைத் தரும். நிதிநிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. குடும்ப விஷயத்தில் மட்டும் அனுசரணை தேவை.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top
I am Online
I am Online