நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 12 ஏப்ரல் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 12 ஏப்ரல் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்றைய நாள் தனலாபம் பெருகும் நன்னாளாக அமையும். தேவையற்ற செலவுகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்து ஆலோசிக்கலாம்; விரிவுபடுத்தும் எண்ணங்களும் ஈடேறும். இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனமகிழ்ச்சி ததும்பும் இத்தினத்தில், மனம் விரும்பியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். காதல் அரும்பி, திருமணப் பேச்சுவார்த்தைகள் இனிதே தொடங்கும். நிறைந்த மனநிறைவு கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் கிட்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஏற்ற நாள். மாணவர்களின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி குறித்த முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். எண்ணிய காரியங்கள் கைகூடும். தீராத பகையும் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினர் இன்று அமைதியாகவும், நிதானமாகவும் தங்களது பணிகளைச் செவ்வனே செய்வர். எவ்வித ஆடம்பரமும் வெளிப்படாது. எவ்வளவு பெரிய புகழ் உங்களைத் தேடி வந்தாலும், தலைக்கனம் கொள்ளாமல் நிலையாக இருப்பீர்கள். இத்தகைய அமைதியான குணம் உங்களுக்கு மேலும் பல பெருமைகளைச் சேர்த்து, மாண்பினை உயர்த்தும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிறு மனக்குழப்பங்கள் எழலாம். தேவையற்ற சிந்தனைகள் மனதை வாட்டக்கூடும். அவ்வப்போது சிறுசிறு சிரமங்கள் தோன்றினாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. இறைவழிபாட்டில் ஈடுபட்டு, இஷ்ட தெய்வத்தை வணங்குவதன் மூலம் நிச்சயம் நன்மைகளே உண்டாகும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினர் இன்று வெற்றி வாகை சூடுவர். சிந்தனைகளில் தெளிவும், செயல்களில் துணிவும் மேலோங்கும். இனிமையான முறையில் பொழுதைக் கழிப்பீர்கள். நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த உறவுகளைச் சந்திக்க வாய்ப்புகள் அமையும். செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று வளமான நாளாக அமையும். உடல்நலனில் இருந்து வந்த இடர்பாடுகள் அகலும். நீண்ட தூரப் பயணங்கள் நல்ல பலனைத் தரும். பகை அகலும் நாள் இது. குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்துப் பேசத் தொடங்கலாம். உத்தியோகத்தில் சீரான முன்னேற்றமும், வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சியும் காணப்படும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று இல்லத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஏற்ற நாள். சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஒட்டுமொத்தமாக சுபமான நாளாக இருக்கும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான போக்கு நிலவினாலும், பெரிய அளவிலான சிக்கல்கள் தோன்றாது. கூடுமானவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வெயில் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்று லாபம் பெருகும் நாளாகும். புதிய முதலீடுகள் குறித்துச் சிந்திக்கலாம். எதிர்கால சேமிப்பிற்கான திட்டங்களைத் தொடங்க ஏற்ற காலம். உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நன்மைகளே நடக்கும். இந்த விடுமுறை நாள் இனிமையானதாக அமையும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று பிரச்சனைகள் தீரும் அமைதியான நாள். நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம் என போதிய ஓய்வும், மன நிம்மதியும் கிட்டும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பிள்ளைகளின் கல்வி மற்றும் நலனில் சிறப்புக் கவனம் செலுத்துவீர்கள். நல்லதே நடக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்று உற்சாகம் பொங்கும் நாளாகும். எங்கு அவமானப்பட்டீர்களோ, அதே இடத்தில் பாராட்டுகள் குவியும். பகை அகன்று, குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் எதிர்பாராத உயர்வுகளை அடைய வாய்ப்புகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று சிறு கோபமும், மன வருத்தமும் உண்டாகக்கூடும். கோபத்தை அதிகமாக வெளிப்படுத்தாமல், நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அவசரப் போக்கைத் தவிர்க்க வேண்டும். பேசும்போது வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. இருக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக அமையும். உங்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நீண்ட தூரப் பயணங்களால் மனதிற்கு சந்தோஷம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி பெருகும். சுபச் செலவுகள் ஏற்படும். இன்று மாலை நேரத்தில் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online