மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுடைய வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். வாக்கு தவற மாட்டீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் முதியவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் பொருத்தவரை இன்று உயர்வு தரும் நாளாக இருக்கப் போகிறது. பெருமையான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனுபவ சாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். நல்ல நண்பர்களின் அறிமுகம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும். நான்கு பேருடைய ஆதரவு கிடைக்கும். பகை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் வீடு திரும்புவதற்கான நல்ல நேரம் வரும். சொந்த பந்தங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய கடமையை சரியான நேரத்திற்கு முடித்து விடுவீர்கள். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய உதவிகளை எதிர்பார்ப்பீர்கள். ஆனால் தேவையான சமயத்தில் தக்க உதவி உங்களுக்கு கிடைக்கும். அதனால் மன நிறைவு இருக்கும். சிரமங்களை அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபம் வேண்டாம் அவசரம் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குடும்பத்தோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சந்தோஷம் பிறக்கும் பொன் பொருள் சேர்க்கையும் உண்டு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சுத்திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் என்று எல்லோரும் பேசுவாங்க. சின்னதாக திருஷ்டி விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. திருஷ்டி சுற்றி போட்டுக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த கோவில், குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பேரு வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலையும் வியாபாரமும் உங்களுக்கு நல்லதை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். பிரச்சனைகள் வரும். சண்டை சச்சரவு வரவும் வாய்ப்பு உள்ளது. வேலை வியாபாரம், குடும்பம் எல்லா விஷயத்திலும் பொறுமை தேவை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் நல்லதே நடக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவாக பேசுவீர்கள். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையையும் சரி செய்வீர்கள். பல பேருக்கு நீங்கள் தெய்வமாக தெரிய போகிறீர்கள். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் உயரப்போகிறது. இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று குழப்பத்திலிருந்து விடுபடும் நாளாக இருக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த பகை விலகும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ராஜபோக வாழ்க்கை தான். நல்ல உபசரனை, நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று உங்களுடைய வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவீங்க. நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. செலவுகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


