நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 14 ஏப்ரல் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 14 ஏப்ரல் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்


மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத்திறனும், உற்சாகமும் பெருகும். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு, தங்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். இறைவழிபாட்டில் ஈடுபட்டு, குறிப்பாக முருகப்பெருமானை வணங்குவது சிறப்பு. ஆண்டு முழுவதும் நற்பலன்கள் கிட்டும்.

ரிஷபம்


ரிஷப ராசி அன்பர்கள் இன்று பொறுமையுடன் செயலாற்றுதல் அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற பகையை வளர்க்காமல், எதிரிகளையும் நண்பர்களாக்கும் கனிவான அணுகுமுறை வெற்றி தரும். பேச்சில் நிதானம் கடைப்பிடிப்பது நலம். முருகப்பெருமானின் திருவருளால் நற்பலன்கள் உண்டாகும்.

– Advertisement –

மிதுனம்


மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சுகபோக வாழ்வும், மன அமைதியும் கிட்டும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். துர்க்கை அம்மனை வழிபடுவது கூடுதல் நன்மை பயக்கும். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு, இனிய புத்தாண்டாக அமையும்.

கடகம்


கடக ராசி அன்பர்களுக்கு இன்று மனநிறைவும், அமைதியும் மேலோங்கும். இறைவழிபாட்டின் மூலம் மனக் கலக்கங்கள் நீங்கும். உறவுகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் தென்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்பும், செயல்திறனும் அதிகரிக்கும்.

– Advertisement –

சிம்மம்


சிம்ம ராசி அன்பர்கள் இன்று லாப நோக்குடன் சிந்தித்து செயல்படுவார்கள். நிதி சார்ந்த விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடுடன் நடந்துகொள்வீர்கள். இது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சிறு மனஸ்தாபங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, மிகுந்த நிதானத்துடனும், பக்குவத்துடனும் செயல்படுவது நலம். ஒட்டுமொத்தமாக இந்நாள் சிறந்த நாளாக அமையும்.

கன்னி


கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று இரக்க குணம் மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறு சிறு சவால்கள் தோன்றலாம். எனினும், அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களில் வெளிப்படும். இறைவழிபாடு இந்நாளை இனிய நாளாக்கும்.

– Advertisement –

துலாம்


துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நற்பலன்கள் அதிகரிக்கும் நாளாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப நிகழ்வுகள் தங்கள் வாழ்வில் அரங்கேறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வாகனங்களை இயக்கும்போது மிகுந்த கவனம் தேவை.

விருச்சிகம்


விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் சிறு சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து, தங்கள் பணியில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள். பேச்சைக் குறைத்துக் கொள்வதும், முன்கோபத்தைத் தவிர்ப்பதும் நலம். அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

தனுசு


தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சற்று உடல் சோர்வு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறு பின்னடைவுகள் தோன்றக்கூடும். வீண் விரயச் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், நிதி விஷயங்களில் எச்சரிக்கை தேவை. முடிந்தவரை நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்


மகர ராசி அன்பர்களுக்கு இன்று மன மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த பல கேள்விகளுக்கு தெளிவான விடைகள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கி, வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். நீண்டதூரப் பயணங்கள் சிறப்பான பலனைத் தரும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.

கும்பம்


கும்ப ராசி அன்பர்கள் இன்று மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்வீர்கள். புதிய வேலைவாய்ப்புகளை நாடுபவர்களுக்கு நற்செய்தி கிட்டும். நீண்டதூரப் பயணங்கள் மன அமைதியைத் தரும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மீனம்


மீன ராசி அன்பர்களுக்கு இன்று சிறு உடல் சோர்வு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில தடங்கல்கள் வரக்கூடும்; எனினும், இது தோல்வியாகாது. இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லதே நடக்கும். செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வதுடன், தங்கள் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் செலுத்துங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online