நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 19 ஏப்ரல் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 19 ஏப்ரல் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இத்தினம் வெற்றிகள் குவியும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு சிறப்படைவீர்கள். எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். திறமைகள் வெளிப்பட்டு நற்பெயர் கிட்டும். சோம்பல் அகன்று உற்சாகம் பொங்கும் நாள். இறைவழிபாடும், இயலாதவர்களுக்கு உதவும் நற்பணிகளும் உன்னத பலன் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இத்தினம் மனதில் சஞ்சலமும், தேவையற்ற சிந்தனைகளும் குழப்பங்களும் குடி கொள்ளலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானம் அவசியம். முருகப் பெருமான் வழிபாடு சங்கடங்களிலிருந்து விடுபட வழி வகுக்கும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இத்தினம் மனதில் அச்சமும், பதட்டமும் நீடிக்கலாம். உயர் அதிகாரிகளுடன் வார்த்தைப் போர்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பணிகளில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். அறிமுகமற்றவர்களிடம் அவநம்பிக்கை கொள்வது நன்று. புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. செலவுகளைக் கட்டுக்குள் வைத்தல் புத்திசாலித்தனம். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, இத்தினம் நண்பர்கள் மூலம் நற்செய்திகளும், புதிய அனுபவங்களும் கிடைக்கும். பயணங்கள் இனிமையானதாக அமையும். பிரிந்த உறவினர்களுடன் மீண்டும் இணைந்து மன மகிழ்வீர்கள். தேவையான ஓய்வு கிடைத்து மனம் லேசாகும். பிள்ளைகளின் நலனில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இத்தினம் சிறுசிறு தடைகளும், தாமதங்களும் ஏற்படக்கூடும். பணிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. போதுமான ஓய்வு மேற்கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இத்தினம் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழியும்; சந்தோஷம் இரட்டிப்பாகும். புதிய முதலீடுகள் பெரும் லாபத்தைத் தேடித்தரும். காதல் கைகூடி, திருமண பந்தத்தில் இணைய வழி வகுக்கும். தொழிலில் நிலவி வந்த நீண்டகாலச் சிக்கல்கள் நீங்கும். காரியத்தடைகள் அகன்று சுப காரியங்கள் கைகூடும் நாள்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இத்தினம் சுறுசுறுப்புடன் செயல்படுவது அவசியம். எந்த செயலையும் தாமதப்படுத்தாதீர்கள். முக்கிய காரியங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே சென்று காத்திருத்தல் நன்று. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். போதுமான ஓய்வு அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இத்தினம் இனிய உணவும், ஆழ்ந்த உறக்கமும் கிடைத்து சுகபோகமான நாளாக அமையும். இல்லத்தரசிகள் வீட்டை செப்பனிடும் பணிகளில் ஆர்வம் காட்டுவர். பழுதடைந்த பொருட்களைச் சீரமைக்கும் வாய்ப்பு உண்டு. மனதில் அமைதி நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இத்தினம் வருமானம் பெருகும் நாள். வாராக் கடன்கள் வசூலாகும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் அகலும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பணியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, இத்தினம் சவால்கள் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அறிமுகமற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவது ஆபத்து. பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. யாரிடமும் பகைமை பாராட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. எதிரிகளால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இத்தினம் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். இல்லத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்; சுபச் செலவுகள் ஏற்படலாம். வேலை தேடுவோருக்கு நற்செய்திகள் காத்திருக்கின்றன. இல்லத்தரசிகளுக்கு பணிகளின் பளு சற்றுக் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்; போதிய நீர் அருந்துவது அவசியம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே, இத்தினம் சில எதிர்ப்புகள் எழலாம்; அனுசரித்துப் பேசுதல் நன்மை தரும். முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவது அவசியம். உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. நிதி நிலை சீராகும். கடன் சுமை விலகும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online