நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 25 ஏப்ரல் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 25 ஏப்ரல் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினரே, இன்று உங்களுக்கு வெற்றிகள் குவியும் நன்னாள். எண்ணிய காரியங்கள் யாவும் கைக்கூடும். புதிய திட்டங்களைத் துணிந்து மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முதலீடுகள் லாபம் தரும். கல்வித் துறையில் உள்ள மாணவர்கள் மேன்மைக்கான முயற்சிகளைத் தொடங்கலாம். சுபச் செலவுகள் மனநிறைவை அளிக்கும். இரவில் ஆழ்ந்த உறக்கம் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே, இன்று நீங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். எச்செயலையும் ஆதாய நோக்கத்துடனே அணுகுவீர்கள். லாப நஷ்டக் கணக்கிட்டு, மிகுந்த சிந்தனையுடன் முடிவெடுப்பீர்கள். சுயநலப் போக்கு சற்று மேலோங்கக்கூடும். இதனால், புதிய சவால்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. எக்காரியத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையை விளைவிக்கும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினரே, இன்றைய நாள் உங்களுக்குப் பெரும் முன்னேற்றங்களை அளிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருமடங்காகும். கணவன்-மனைவிக்கிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஓங்கும். பயணங்கள் யாவும் இனிதாக நிறைவடைந்து ஆதாயம் தரும்.

கடகம்

கடக ராசியினரே, இன்று உங்கள் மனம் அமைதி பெறும். இதுவரை இருந்த மனக் குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். காலத்தை வீணாக்காது கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இரவில் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவீர்கள்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினரே, இன்று நீங்கள் சுகபோக வாழ்வைப் பெறுவீர்கள். உணவு, உறக்கம் போன்ற அனைத்தும் குறித்த நேரத்தில் அமைந்து உடல் புத்துணர்ச்சி பெறும். நல்ல உபசரிப்புகள் உங்கள் மனதை இதமாக்கும். உடல் சோர்வு நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். வருமானம் சீராகி, தேவையான நிதியாதாரம் கையில் இருக்கும்.

கன்னி

கன்னி ராசியினரே, இன்று உங்களுக்குப் பொற்காலமான வருமானம் குவியும் நாள். வாராக் கடன்கள் வசூலாகும். உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அடமானப் பொருட்கள் யாவும் மீட்கப்படும் சந்தர்ப்பங்கள் உருவாகும். பட்ட அவமானங்களுக்குப் பதில் கிடைத்து, தலைகுனிந்த இடத்தில் நீங்கள் தலை நிமிர்ந்து நிற்பீர்கள்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினரே, இன்று நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பேசும் வார்த்தைகளில் நிதானமும், முன்னெச்சரிக்கையும் தேவை. முன்கோபத்தைக் கைவிட்டு, உயர் அதிகாரிகளை எதிர்ப்பதைத் தவிர்க்கவும். புதிய முடிவுகளை எடுக்கும்முன் பலமுறை யோசித்துச் செயல்படுங்கள். அவசர முடிவுகளைத் தவிர்த்து, உங்கள் பணியினைப் பாதுகாத்துக் கொள்வது சிறப்பு.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே, இன்று உங்கள் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகும். காதல் கைகூடி, திருமண பந்தத்திற்கு வழிவகுக்கும். வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். இறைவனின் முழுமையான அருளால், நீங்கள் எண்ணாத நன்மைகள் கூட நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசியினரே, இன்று நீங்கள் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனைத்தும் நல்ல பெயராக மாறும். எங்கு அவமானப்பட்டீர்களோ, அதே இடத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இறைவனுக்கு மனதார நன்றி செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசியினரே, இன்று உங்கள் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சிந்தனையில் துல்லியம் ஏற்பட்டு, உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். தேவையான பணம் உங்கள் கைகளில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசியினரே, இன்று நீங்கள் நிதானத்துடன் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உங்கள் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். கோபம் குறைந்து, பொறுமை மேலோங்கும். சுற்றியுள்ளவர்களுடன் நல்லுறவை மேம்படுத்துவீர்கள். புதிய நண்பர்களின் வருகை மனதிற்கு அமைதியைத் தரும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட்டு, நிதி நிலைமை சீராகும்.

மீனம்

மீன ராசியினரே, இன்று நட்பு ரீதியாக உங்களுக்குப் பல நன்மைகள் உண்டாகும். புதிய மனிதர்களின் தொடர்பால், பல அரிய அனுபவங்களையும் புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்வீர்கள். பணத்தின் அருமை பெருமைகளை உணர்வீர்கள். சில உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, உங்கள் மனம் தெளிவு பெறும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online