மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். சிறுசிறு தடங்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். மனக்குழப்பமும், சிந்தனைத் தடுமாற்றமும் ஏற்படக்கூடும். இத்தகைய தருணங்களில் புதிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நலம். இறைவழிபாடு மேற்கொண்டு, அனுபவசாலிகளின் அறிவுரைகளை ஏற்று, ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் கிட்டும். புதியவர்களின் அறிமுகமும், தொடர்புகளும் உருவாகும். உங்கள் கருத்துக்களுக்குப் பலரின் அங்கீகாரமும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் பெயர், புகழ், கௌரவம் ஆகியன உயரும். தேவையான நிதி ஆதாரங்கள் கையில் இருக்கும். சுவையான உணவு, நிம்மதியான உறக்கம் என இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று எதிலும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளைத் தவிர்க்கவும். ஏமாற்றங்கள் நேர்வதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுங்கள்; பலனை எதிர்பாராது கடமையாற்றுங்கள். இறைவருளால் அனைத்தும் நன்மையில் முடியும். கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. சத்தான உணவை மட்டும் உட்கொள்ளவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மேன்மை நிறைந்த நாளாக அமையும். பணி மற்றும் வியாபாரத்தில் புத்துணர்ச்சி காணப்படும். இல்லத்தில் உள்ள பெண்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் ஏற்க நேரிடும். ஓய்வெடுக்கப் போதிய நேரம் கிடைக்காது. உடல் சோர்வு ஏற்படக்கூடும். நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்துங்கள். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். முன்னேற்றங்கள் உண்டாகும் நாளாகும். வியாபார விரிவாக்கத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பணியில் நிதானம் தேவை. மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். தற்போதைய பணியைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். சிலருக்குக் கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். மருத்துவச் செலவுகள் நேரிடவும் வாய்ப்புள்ளது. கவனமுடன் இருங்கள். மற்றபடி பணி மற்றும் வியாபாரத்தில் சுமுகமான போக்கே நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று சுகபோகங்கள் நிறைந்த நாளாகும். சுவையான உணவு, நிம்மதியான உறக்கம், சிறப்பான உபசரிப்புகள் என இந்த நாள் இனிமையாகக் கழியும். இல்லத்தில் உள்ள பெண்களுக்கும் போதுமான ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் வெளி இடங்களுக்குச் சென்று வர வாய்ப்புண்டு. சுபச் செலவுகள் உண்டாகும். பணி மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் கவலை குடிகொள்ளலாம். இப்பாராட்ட விடுமுறை தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத சூழல் ஏற்படலாம். இருப்பினும் நம்பிக்கையை இழக்க வேண்டாம். இறைவழிபாடு ஆற்றவும். உங்கள் கடமைகளைச் சரியாக நிறைவேற்றுங்கள். நல்லதே நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் உண்டாகும் நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பணி மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாள் பகைகள் நீங்கும். மனக்கசப்புகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சுபச் செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாகும். விருந்தினர்களின் வருகையால் சந்தோஷம் இரட்டிப்பாகும். பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய நீர் அருந்துங்கள். கடும் வெயில் சமயத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக முதியோர்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக அமையும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும். தேவையான செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். வீண் விரயங்களைத் தவிர்க்கவும். பொருளாதார வளங்கள் கிடைக்கும்போது சேமிப்பது புத்திசாலித்தனம். வாழ்க்கைத் துணையின் அறிவுரைகளைக் கேட்பது நலம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகரிக்கக்கூடும். வாக்குவாதங்கள் நேரிடலாம். பேச்சைக் குறைத்துக் கொள்வது உத்தமம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அளவாகப் பேசுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். முடிந்தால் மௌனம் காப்பது பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


