மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்று நீங்கள் கருமமே கண்ணாகச் செயல்பட வேண்டும். காலதாமதம் காரியத் தடைகளை விளைவிக்கும். முக்கியப் பணிகளுக்குக் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று சேர்வது நலம். முதியோரின் அறிவுரைகளைக் கருத்துடன் கேட்பது சிறப்பு. குறிப்பாக, இளையோர் உணர்ச்சிவசப்பட்டு எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ளலாகாது. நிதானம் காப்பது நன்மை பயக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்று பொறுமையுடன் செயல்படுவது இன்றியமையாதது. ஆவேசமான முடிவுகளைத் தவிர்த்தல் வேண்டும். எவருடனும் வாத விவாதங்களைத் தவிர்ப்பது நலம். எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடலாம். இத்தகைய சூழலை எதிர்கொள்ள இறைசக்தி துணை புரியும். காலைப் பொழுதிலேயே இறைவழிபாட்டை மேற்கொண்டு நாளைத் தொடங்குவது சிறப்பு.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு எதிர்பாராத நற்பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலிலும் வியாபாரத்திலும் மேம்பாடு காண்பீர்கள். நெடுநாள்களாகக் கிடப்பில் இருந்த பணிகளை இன்று செவ்வனே முடிப்பீர்கள். காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். இறைவனுக்கு நன்றி கூறி மகிழ்வது அவசியம்.
கடகம்
கடக ராசி நேயர்களே, இன்று செலவினங்கள் சற்று உயரும். அவசியச் செலவுகளாக இருப்பினும், சிலருக்கு வருவாய்க்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நிதி சார்ந்த விடயங்களில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்போது ஆழ்ந்த கவனம் தேவை. பொதுவாக, இந்த நாள் இனிமையானதாய் அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்று லாபகரமான நாளாகப் பொலியும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் துணிந்து செய்யலாம். புதிய சேமிப்புத் திட்டங்களைத் தொடங்கலாம். தூரப் பயணங்கள் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் அமையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கசப்புகள் மறைந்து, இணக்கம் மேலோங்கும். உறவுகளுக்குள் இருந்த மன வருத்தங்கள் நீங்கி, நேசம் பெருகும். நற்பலன்களே உண்டாகும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்று வருவாய் பெருகும் நாளாக மிளிரும். தேவைக்கேற்ப தனம் கையில் புரளும். வீட்டிற்குத் தேவையான பொன்னையும் பொருளையும் வாங்கி மகிழ்வீர்கள். வசூலாகாத கடன்கள் வசூலாகும். சொத்து சேரும் யோகம் உண்டு. அடமானம் வைத்த பொருட்களை மீட்கவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். லட்சுமி கடாட்சம் நிறைந்த இப்புனித நாளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று பொறுமை காப்பது அதி அவசியம். அவசரப் போக்கைத் தவிர்க்கவும். தொழிலிலும் உத்தியோகத்திலும் பன்முறை யோசித்து முடிவெடுப்பது சிறந்தது. தற்போதைய பணியைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனம் தேவை. மூன்றாம் நபரின் சொற்களைக் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். நிதானத்துடன் செயல்பட்டால், பல நற்காரியங்களைச் சாதிக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்று மனநிறைவு கூடும் நாளாக அமையும். தங்களின் கடமைகளைச் சரியான நேரத்தில் செவ்வனே நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் புண்ணியம் பெறுவீர்கள். நெடுநாளைய மனக் கஷ்டங்கள் நீங்கும். மிகப்ப பெரும் போராட்டமாய் இருந்த சிக்கல்கள் கூட எளிதில் தீரும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இயலாதவர்களுக்கு ஈந்து மகிழுங்கள்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்று புதிய விடயங்களில் ஆர்வம் பெருகும். புதிய கலைகளையும் ஞானத்தையும் எளிதில் கற்றுத் தெளிவீர்கள். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். பணி தேடுபவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையும். பயணங்களில் மிகுந்த கவனம் தேவை.
மகரம்
மகர ராசி நேயர்களே, இன்று லட்சுமி கடாட்சம் பொழியும் நன்னாளாகப் பிரகாசிக்கும். இல்லத்தில் தனமும் தானியமும் செழிக்கும். வசூலாகாத கடன்கள் வசூலாகும். தேவைக்கேற்ப தனம் தாராளமாகப் புரளும். சேமிப்புகள் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உண்டு. புதிய முதலீடுகளைச் செய்து நன்மை அடையலாம். தூரப் பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்று மன அமைதி மேலோங்கும். நெடுநாளைய சிக்கல்கள் தீர்வு பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுபச் செலவுகள் உண்டாகும். தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் நடந்தேறும். இரவில் ஆழ்ந்த உறக்கம் கைகூடும். தொழிலும் வியாபாரமும் சுமுகமாக நடைபெறும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, இன்று பெயரும் புகழும் பெருகி, பாராட்டுகளும் அந்தஸ்தும் உயரும் நன்னாள். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். நிதி நிலைமை சற்று மோசமான போக்கைக் காணலாம். கணவன் மனைவிக்குள் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால், நற்பலன்களே உண்டாகும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


