நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 11 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 11 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இன்றைய நாள் வருமானம் பெருகி, மனநிறைவு கூடும் அற்புத தினமாகும். நீண்டகாலமாக எதிர்பார்த்த தனவரவுகள் தடையின்றி வந்து சேரும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் நிலவி வந்த இடர்ப்பாடுகள் நீங்கி, சுமுகமான சூழ்நிலை உருவாகும். உயர் அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். வியாபார விரிவாக்கத்திற்கான திட்டங்களை முன்னெடுக்கலாம். நெடுந்தூரப் பயணங்கள் சிறப்பான பலனைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இன்று உங்கள் மனம் அமைதியும், நிம்மதியும் பெறும். இல்லத்தரசிகள் ஆன்மீகச் சிந்தனைகளிலும், தெய்வ வழிபாடுகளிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகம் மற்றும் தொழில் துறைகளில் சுமுகமான போக்கினைக் காண்பீர்கள். உடல்நலத்தில் இருந்து வந்த சிறுசிறு சங்கடங்கள் நீங்கும். இருப்பினும், நீராகாரங்களை அதிகம் அருந்தி, வெயில் காலங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு மிகுந்த சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் அளிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பீர்கள். நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம் என நாள் முழுவதும் இனிமையாக அமையும். இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் உண்டு. உறவினர்களுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் விலகி, மன நிம்மதி கூடும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். தொழில் சார்ந்த மன அழுத்தங்கள் குறையும். உங்கள் பேச்சாற்றல் சிறந்து விளங்கும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். இருப்பினும், முதலீடுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இன்று நீங்கள் மிகுந்த துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சில் தெளிவும், நேர்மையும் காணப்படும். மனதில் இருந்த அச்சங்கள் நீங்கி, தன்னம்பிக்கை பெருகும். நீண்டநாட்களாக மனதில் புதைந்து கிடந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசி, மன பாரத்தை இறக்கி வைப்பீர்கள். நல்லதே நடக்கும். இறைவனின் பரிபூரண அருள் கிட்டும் அற்புதமான நாள் இது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இன்றைய நாள் சில போட்டி, பொறாமைகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடலாம். புதிய முடிவுகள் எடுப்பதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, புது முயற்சிகளைத் தள்ளிப்போட்டு, அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மூன்றாம் நபர்களின் தலையீடுகளைத் தவிர்த்து, உங்கள் முடிவுகளில் உறுதியுடன் இருங்கள்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமானதாகும். தனவரவுகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். எனினும், வீண் விரயச் செலவுகளையும், ஆடம்பரச் செலவுகளையும் கூடுமானவரை குறைத்துக் கொள்வது அவசியம். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் அலட்சியமின்றி கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுவது வெற்றியைத் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இன்று உங்கள் மனம் பாரமின்றி லேசாகும். மனதில் அழுத்தி வைத்திருந்த அனாவசியமான எண்ணங்களை அகற்றுவீர்கள். பழிவாங்கும் உணர்வு நீங்கி, எதிரிகளையும் மன்னிக்கும் மேன்மையான குணம் வெளிப்படும். இறைவனுக்கு நன்றி செலுத்தி, இயலாதவர்களுக்கு உதவுவதன் மூலம் மேலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இன்றைய நாள் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. இன்பங்கள் இரட்டிப்பாகும் சிறப்பான தினம் இது. மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். இல்லத்தில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் நடைபெறத் தொடங்கும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத நன்மைகளைக் காண்பீர்கள். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே! இன்றைய தினம் சிறு மனக்கவலையுடன் தொடங்கினாலும், பிற்பகலுக்குப் பிறகு சுறுசுறுப்பும், தெளிவும் கூடும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். நம்பிக்கைக்குரியவர்களை உடன் வைத்துக் கொண்டு செயல்படுவது சிறந்த பலனைத் தரும். நல்லதே நடக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இன்றைய நாள் நீங்கள் வெற்றிவாகை சூடும் தினமாகும். தெளிவாகச் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பண ரீதியான சிக்கல்கள் நீங்கி, கடன் சுமை குறையும். மன நிம்மதி பெருகும் அற்புதமான நாள் இது.

மீனம்

மீன ராசி அன்பர்களே! இன்றைய நாள் கடமை உணர்வு மேலோங்கும் தினமாகும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். இருப்பினும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், சரியான நேரத்தில் போதிய ஓய்வு எடுப்பதும் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்கள் அனுகூலமான பலனைத் தரும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online