நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 15 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 15 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைந்த சுறுசுறுப்புடன், ஆழ்ந்த உற்சாகத்துடனும் திகழும். பணி மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் உறுதி. நெடுநாளாகக் கிடப்பிலிருந்த காரியங்களைச் சீரிய சிரத்தையுடன் கைகொண்டு முடிப்பீர்கள். புதிய பணிக்கான தேடலில் உள்ளோருக்குச் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுபகரமான தினமாக அமையும். உடல்நலத்தில் சீரிய முன்னேற்றம் தென்படும். முழுமையான முனைப்புடன் செயல்படுவீர்கள். இல்லறக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே அன்னியோன்யம் பெருகும். பிரிந்திருந்த குடும்ப உறவுகள் புதுப்பிக்கப்படும். மாணவர்களுக்குக் கல்வியில் நிலவி வந்த தடங்கல்கள் நீங்கி, முன்னேற்றப் பாதை புலப்படும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று அவசியமான உதவிகள், உரிய வேளையில் வந்தெய்தும். பணி மற்றும் வணிகத்தில் நிலவிய மன உளைச்சல் தணியும். நெடுந்தூரப் பயணங்கள் நற்பலன்களை அள்ளித்தரும். மாணவர்களுக்குக் கல்வி சார்ந்த விடயங்களில் சிறுசிறு தடங்கல்கள் தோன்றலாம். எனினும், உத்வேகத்துடன் கூடிய மேலதிக முயற்சி வெற்றியை ஈட்டித்தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று நற்பலன்கள் கூடும் நன்னாள். பணி மற்றும் வணிகச் செயல்களில் சுறுசுறுப்பு மேலோங்கும். தேவைகேற்ற தனவரவு கிட்டும். உடல்நலக் குறைபாடுகள் நீங்கி, நலம் பெருகும். இல்லத்தில் உள்ள பெண்களுக்குப் பொன், பொருள் சேரும் யோகம் உண்டு. மாணவர்களுக்குக் கல்வியில் உன்னத வளர்ச்சி உண்டாகும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அகஸ்மாத்தான அதிர்ஷ்ட யோகம் காத்திருக்கிறது. நீண்ட காலமாக வந்து சேராத தனம், உங்கள் கரங்களை வந்தடையும். கடன் சுமையிலிருந்து பூரணமாக விடுபடுவீர்கள். பணப் பற்றாக்குறை அகலும். வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் புலப்படும். எதிர்பாராத இலாப வாய்ப்புகள் அமையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகளும் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று பாராட்டுதல்கள் தாமாகவே உங்களைத் தேடி வரும். கல்வித் துறையில் சீரான முன்னேற்றம் தென்படும். பணி மற்றும் வணிகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிட்டும். பகைவர்களின் தொல்லைகள் அகலும். உயர் அதிகாரிகளுடன் சுமூகமான உறவு வலுப்படும். வெளியூர்ப் பயணங்கள் அமையும். வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவோருக்கு நற்செய்திகள் காத்திருக்கின்றன.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றங்கள் பெருகும் நன்னாள் இது. புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை ஈட்டித்தரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். வணிகத்தில் புதிய முதலீடுகளுக்கான வங்கிக் கடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். சுபமே நடக்கும்; வெற்றி உமக்கே உரியதாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று நற்பலன்கள் உண்டாகும். உங்கள் வசீகரத் தோற்றமும், கவர்ச்சிகரமான பேச்சாற்றலும் வாழ்வில் பெரும் முன்னேற்றங்களைத் தரவல்லது. கலைத்துறையினருக்கு அகஸ்மாத்தான அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். இல்லத்தில் உள்ள பெரியோர்களின் உடல்நலனில் சற்று கூடுதல் கவனம் செலுத்துதல் நலம். ஆரோக்கியம் சார்ந்த சிறுசிறு சிக்கல்கள் எழ வாய்ப்புண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று கூர்ந்த கவனத்துடன் செயல்படுதல் அவசியமாகும். பிறரை முழுமையாக நம்பி எந்தக் காரியத்தையும் மேற்கொள்ள வேண்டாம். புதிய நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகவும். உங்கள் இரகசியங்களை வெளிப்படுத்தாமல் காத்துக்கொள்ளவும். வெளிப்படையாகப் பேசுகையில் சில சங்கடங்கள் உருவாகக்கூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று வாழ்வில் மேன்மையான மாற்றங்கள் நிகழும் நன்னாளாக அமையும். பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உங்களைத் தேடி வரும். சிரம்தாழ்ந்த இடங்களில் சிரமுயர்த்தி நிற்கும் நிலை ஏற்படும். உங்களைச் சுற்றி ஒரு மரியாதைக்குரிய சூழ்நிலை உருவாகும். அது மனதிற்கு இதமான அநுபவங்களைத் தந்து, ஆத்ம திருப்தியை அளிக்கும். மன சங்கடங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் பொங்கும் நாளாக அமையவிருக்கிறது. தேவைகேற்ற தனவரவு தடையின்றி கிட்டும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பெண் சந்தானங்களால் மனமகிழ்ச்சி பெருகும். கட்டுமானத் தொழில் சிறப்பான இலாபத்தைத் தரும். தரகுத் தொழிலில் நிலவிய தடங்கல்கள் அகலும். பயணங்களின்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. வாகனம் இயக்குகையில் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று தங்கள் கடமைகளிலிருந்து தவறாமல் செயல்படுவீர்கள். நற்செயல்களைச் சிரத்தையுடன் ஆற்றுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து, அன்னியோன்யம் ஓங்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புகள் அமையும். பணவியல் சார்ந்த விடயங்களில் சிறுசிறு இடர்பாடுகள் தோன்றக்கூடும். செலவினங்களைக் கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம். மங்கலமே நிகழும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online