நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 16 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 16 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் இலாபகரமான நாளாக அமையும். வணிக ரீதியான சிக்கல்களுக்குத் தெளிவான தீர்வு கிட்டும். புதிய வணிக முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த காலம். பணியிடத்தில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் சற்றுக் குறையலாம். மேலதிகாரிகளிடம் பணிவோடு உரையாடுவது நன்மை பயக்கும். குடும்பச் சூழலில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மங்கலச் செலவுகள் கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்றைய பொழுதில் நன்மைகள் தேடி வரும். தங்களின் வாழ்வியல் சார்ந்த முடிவுகளில் சிறு பிழைகள் இருப்பினும், தெய்வ அருளால் அவை நற்பலன்களாக மாறும். இன்று தீமைகள் விலகி, சுபகாரியங்கள் கைகூடும். எதிர்காலத்திற்கான இன்றிமையாத முடிவுகளை மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசி அன்பர்கள் இன்றைய தினம் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். நாள் முழுதும் அயராத உழைப்பில் ஈடுபடுவீர்கள். நேரம் போவதே அறியாத வண்ணம் ஒவ்வொரு கணப்பொழுதையும் பயனுள்ளதாக மாற்றுவீர்கள். தங்களின் செயல்பாடு பிறருக்கு முன்மாதிரியாக அமையும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

கடகம்

கடக ராசியினர் இன்று மிகுந்த கவனத்துடன் செயல்படுதல் வேண்டும். பேசும் வார்த்தைகளில் தெளிவும், மேற்கொள்ளும் பணிகளில் ஒருமுகத்தன்மையும் அவசியம். புது முடிவுகள் எடுக்கும்போது பதட்டத்தைத் தவிர்க்கவும். இறைவழிபாட்டில் ஈடுபட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நிச்சயம் நற்பலன்கள் உண்டாகும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்கள் இன்றைய தினம் நிதானத்துடன் நடந்துகொள்வார்கள். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றப் பாதை புலப்படும். இதுநாள் வரை தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் வெற்றியை ஈட்டித் தரும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் பெயர், புகழ், அந்தஸ்து உயரக்கூடிய நாளாகும். தங்களுக்குரிய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கிட்டும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்லோரின் நட்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். அனுபவசாலிகளின் அறிவுரைகள் இன்றைய தினத்தில் தங்களுக்கு நன்மையளிக்கும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசி அன்பர்கள் இன்றைய தினம் வெற்றி வாகை சூடுவார்கள். புதிய முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொள்ளலாம். நீண்ட தூரப் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். பணியிலும் வணிகத்திலும் சுறுசுறுப்பு மேலோங்கும். பகை விலகி, உறவுகளிடையே நல்லுறவு உண்டாகும். மங்கலச் செலவுகள் அதிகரிக்கும். இன்றைய பொழுதில் நேரம் போவதே தெரியாது.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் உள அமைதி நிலைக்கும். தேவையற்ற சந்தேகங்கள் விலகும். நீண்டநாள் சிக்கல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை பெருகும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான தடைகள் நீங்கி, சுப நிகழ்வுகள் அரங்கேறும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் சற்று மனச்சுமை கொண்ட நாளாக அமையக்கூடும். உளச்சோர்வால் அன்றாடப் பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. கவனத்துடன் இருத்தல் நலம். கவலைகளை ஒதுக்கிவைத்து, இறைவனின் மீது நம்பிக்கை கொண்டு, அன்றைய பணிகளைச் செவ்வனே ஆற்றுங்கள்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்றைய தினம் தேவையான அளவு ஓய்வும், போதுமான அளவு பணமும் கையில் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வேலைப்பளுவோ, வணிகச் சுமையோ இன்றி இந்த நாள் மகிழ்ச்சியாகக் கழியும். இல்லத்தரசிகளுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மனம் ஈடுபடும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் பெயர், புகழ், அந்தஸ்து, பதவி கிடைக்கக்கூடிய நன்னாளாகும். பதவி உயர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்களுக்குச் சுப பலன்கள் உண்டாகும். சரியான வாழ்க்கைத் துணை அமையாதவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. இறைவனின் பரிபூரண அருள் இன்று தங்களுக்குக் கிட்டும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்றைய தினம் முன்னேற்றம் நிறைந்த நாளாக அமையும். பல நாள் போராட்டங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மனம் ஈடுபடும். குடும்பத்துடன் திருக்கோயிலுக்குச் சென்று நேரத்தைச் செலவிடுவீர்கள். மங்கலச் செலவுகள் ஏற்படும். மனநிம்மதி கிட்டும் நாளாகும் இன்று.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online