நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 18 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 18 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபமானதாகும். ஆரோக்கியம் சீராகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். பொருளாதார நிலை மேம்பட்டு, கடன் தொல்லைகள் அகலும். இறைவழிபாடு மன அமைதியை அருளும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று கோபத்தைக் கட்டுப்படுத்துவது நலம். தொழில் மற்றும் வர்த்தகத்தில் நிதானத்தோடு செயல்பட வேண்டும். மனதிற்குப் பிடித்தவர்களுடன் சச்சரவுகளைத் தவிர்க்கவும். எந்த விஷயத்திலும் வாக்குவாதங்கள் இன்றி அமைதி காத்தல் அவசியம். பொறுமை பல நன்மைகளைத் தரும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள். செயல்களில் வேகம் கூடும். நீண்டகாலமாக நிலுவையிலுள்ள காரியங்களை சுறுசுறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். இல்லத்தரசிகள் வீட்டு வேலைகள், பழுது நீக்குதலில் ஆர்வம் காட்டுவர். மன நிறைவு உண்டாகும் நாள் இது.

கடகம்

கடக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று காரியங்கள் சுறுசுறுப்புடன் நடைபெறும். நேரத்தை அனாவசியமாக வீணடிப்பது தவிர்க்கப்படும். உங்களுடைய பொறுப்புணர்வோடு செயல்படுவீர்கள். இல்லத்தரசிகள் ஆன்மீக நாட்டத்துடன் இருப்பர். மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத நாள்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஏற்ற நாள். புதிய தொழில் வாய்ப்புகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல், எதிர்கால சேமிப்பில் கவனம் செலுத்தலாம். நற்பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்புக் கவனம் தேவை, கூடுமானவரை வெளியுணவைத் தவிர்ப்பது நலம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன் கோபம் தலைதூக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற சண்டைகள், கருத்து வேறுபாடுகள் எழும். நிறைய பஞ்சாயத்துகளைக் கூட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். தொழில் மற்றும் வர்த்தகத்தில் பகையை வளர்க்காது நட்புறவு பேணுவது அவசியம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்றைய நாளுக்கு மிகவும் தேவை.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் பெருகும் நாள். பொருளாதாரத்தில் சீரான நிலை காணப்படும். உங்களுடைய அத்தியாவசியத் தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். குழந்தைகளின் நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வித் தடைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். உயர்வு நிறைந்த சிறப்பான நாள் இது. மதிப்பும் மரியாதையும் உங்களைத் தேடி வரும். எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ, அதே இடத்தில் புகழ் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். குடும்ப மகிழ்ச்சி பன்மடங்கு பெருகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று பெயர், புகழ், அந்தஸ்து உயரும். சமூகத்தில் உங்களுக்குரிய மதிப்பு கூடும். மனது முழுவதும் மகிழ்ச்சி நிறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள். பொதுப்பணிகளிலும், பிறருக்கு உதவும் செயல்களிலும் ஈடுபடுவீர்கள். தலைக்கனம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

மகரம்

மகர ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று சுகபோகமான வாழ்வு அமையும். செல்லும் இடமெல்லாம் சிறப்பும் மரியாதையும் கிட்டும். நல்ல உணவு, நிம்மதியான உறக்கம், போதிய ஓய்வு என ராஜ உபசாரத்துடன் இன்றைய நாள் கழியும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். சுபகாரியப் பேச்சுக்களைத் துவங்க ஏற்ற நாள். நன்மையே நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மிக அவசியம். நிதானத்துடன் நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தேடித் தரும். ஆர்ப்பாட்டமும் கோபமும் தோல்வியையே அளிக்கும். சண்டைகள், விவாதங்களைத் தவிர்த்து, மௌனத்தால் உங்களுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வது சிறந்தது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் நடந்து கொள்வீர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் நிதானத்துடன் கடந்து செல்வீர்கள். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்குக் கிட்டும். சிறந்த பக்குவம் வெளிப்படும். பிறருக்கு ஒரு உதாரணமாகத் திகழும் நாள் இது. இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online