மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஆனந்தம் பொங்கும் நாளாக அமையும். மனம் விரும்பிய காரியங்கள் கைகூடும். காதல் மலர்ந்து, திருமண பந்தமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் உண்டு. சுபகாரியங்களில் இருந்த தடைகள் அகலும். நீண்டநாள் சிக்கல்களுக்கு இன்று நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். வேலையைத் தேடுவோருக்கு நற்செய்தி காத்திருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த தினமாகப் புலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களை வகுக்கலாம். வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கிக் கடன் பெறுவதற்கான முயற்சிகளும் பலனளிக்கும். எதிர்கால சேமிப்பிற்கான ஆலோசனைகளை செயல்படுத்தலாம். நற்பலன்களே உண்டாகும். பணியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சிறு மனப் பதற்றமும், அச்சமும் தோன்றக்கூடும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை இன்று ஒத்திவைப்பது நல்லது. நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். இறை வழிபாட்டில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். நன்மைகளே உண்டாகும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குறித்த நேரத்தில், குறிப்பிட்ட பணிகளைத் திறம்பட முடிப்பீர்கள். தேவையான ஓய்வும் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உடல் அசதி நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சிறு எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். பல முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகே வெற்றி கிட்டும். எவ்வித இடர்ப்பாடுகளுக்கும் அஞ்சாமல், தளரா மனதுடன் செயல்படுங்கள். உங்கள் விடாமுயற்சி இன்று வெற்றியைத் தேடித் தரும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்கள் இன்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். உங்கள் தற்போதைய நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல பல நல்வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்று நிரந்தரத் தீர்வு காணலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி, நலமான நாளாக அமையும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் எவ்வித தடையும் இன்றிச் செயல்படுவீர்கள். உறவுகளுக்கிடையே நிலவிய மனக்கசப்புகள் அகலும். பணப் பற்றாக்குறை குறைந்து, கடன் சுமை நீங்கும். நற்பலன்களே உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். பணியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக எதிரிகளாக இருந்தவர்கள் கூட இன்று நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும். தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளுக்கு இன்று ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பு அதிகரித்து, உங்கள் வாழ்வில் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். வரும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்கள் இன்று மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சின்னச் சின்ன மறதிகளால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமான பணிகளை ஒரு தாளில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் இருந்தால், தேவையான பொருட்களைப் பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள். நற்பலன்களே உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சுகமும், நலமும் நிறைந்த நாளாக அமையும். வேலை, வியாபாரம், குடும்பம் என அனைத்து அம்சங்களிலும் மன நிறைவு கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊர் திரும்புவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால், செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம்.
மீனம்
மீன ராசி அன்பர்கள் இன்று விவேகத்துடன் செயல்படுவீர்கள். சாமர்த்தியமான பேச்சால் பல நல்ல காரியங்களைச் சாதிப்பீர்கள். எதிரித் தொல்லைகள் விலகும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்குக் கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகக்கூடும். பண விஷயத்தில் கவனம் தேவை.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


