நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று சௌபாக்கியமான வாழ்வு அமையும். நீங்கள் எண்ணியதும், எண்ணாததும் என அத்தனையும் இறைவனின் அனுகூலத்தால் கைகூடும். வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க இந்த நாள் ஒரு வரப்பிரசாதமாகத் திகழும். இறைவனுக்கு நன்றி செலுத்தி, இயலாதவர்களுக்கு இயன்றதைச் செய்வதன் மூலம் மேலும் நற்பலன்களை அடையலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஒவ்வொரு செயலையும் சவால்களைச் சந்தித்துதான் முடிக்க நேரிடும். வெற்றி எளிதில் கிட்டாது. சிறுசிறு இடையூறுகள், மறைமுக எதிர்ப்புகள் மற்றும் தோல்விகளைத் தாண்டித்தான் வெற்றியைப் பெற முடியும். எனவே, இந்த நாளைக் கடந்து செல்ல அசாத்தியத் தன்னம்பிக்கையும் மனோதிடமும் இன்றியமையாதது.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாளாகும். உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். நீண்ட தூரப் பயணங்கள் அனுகூலமாக அமையும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நற்பலன் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சற்று மந்தமான சூழல் நிலவக்கூடும். லேசான சோர்வும், சிற்சில மனக்கலக்கமும் அவ்வப்போது ஏற்படலாம். இருப்பினும், கடமைகளில் கண்ணும் கருத்துமாய் இருத்தல் அவசியம். மனதை ஒருமுகப்படுத்தி உங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இறையருளை நம்புங்கள், நிச்சயம் நற்காரியங்கள் நடக்கும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்று மனதில் சிறு சஞ்சலங்கள் தோன்றலாம். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறவுகளில் சிறு வாக்குவாதங்கள் எழக்கூடும். இருப்பினும், நிதானத்துடன் செயல்படுங்கள். நிதானத்தை இழந்தால் பிரச்சனைகளின் வீரியம் அதிகரிக்கக்கூடும், கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரத்தில் நல்லெண்ணம் பெருகும். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதுக்கு இன்பம் தரும் நிகழ்வுகளை ஏற்படுத்தும். நல்ல அனுபவங்கள் கிட்டும். வேலையிலும் வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று சிற்சில இடையூறுகளும் சங்கடங்களும் வரக்கூடும். இருப்பினும், உங்கள் வேலையிலும் வியாபாரத்திலும் பெரும் சிக்கல்கள் எழாது. விடாமுயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும். மனதை தளரவிடாதீர்கள். எந்த விஷயத்திற்கும் அஞ்ச வேண்டாம். துணிச்சலுடன் களமிறங்குங்கள், நற்பலன்கள் கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபநிகழ்வுகள் மீண்டும் தொடங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீண்டநாள் சிக்கல்கள் தீர்ந்து நிம்மதி பிறக்கும். நிதிநிலை சீராகும். கடன் சுமைகள் குறையும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று மிகுந்த சுறுசுறுப்பு அவசியம். உடல் சோர்வை பொருட்படுத்தாது, எறும்புபோல இடைவிடாது உழைக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகமாகும். இருவர் பணிகளைச் சேர்த்துச் செய்யும் சூழல் உருவாகலாம், கவனத்துடன் செயல்படுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத நாளாக அமையும். பெரும் சிக்கல்கள் எழாது. சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும், அவற்றை நீங்கள் சாதுரியமாக கையாள்வீர்கள். உங்கள் தனித்திறமை வெளிப்படும். புதிய அனுபவங்கள் பெருகும். பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று காரியத் தடைகள் நீங்கும். புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உடல்நலக் குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வீண் விரயங்கள் குறையும். நிதி நிலை சீரடையும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் செயல்படுவீர்கள். காரியங்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பீர்கள். உங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றுவீர்கள். நற்பெயர் கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவினால் வேலையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தைப் பொருத்தவரை பெரும் சிக்கல்கள் எழாது, சீரான வளர்ச்சி காணப்படும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online