நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 14 ஜூன் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 14 ஜூன் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி மேலோங்கும் நாள். இல்லத்தரசிகளுக்கு ஆன்மீகச் சிந்தனை அதிகரிக்கும். உள்ளக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழிலிலும் வியாபாரத்திலும் செயல் வேகம் இரு மடங்காகும். தேவையான தனவரவு கிட்டும். நிதிநிலை சீரடைந்து, கடன் சுமை குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். காரியத் தடைகள் அகலும். விநாயகர் வழிபாடு நற்பலன்களைக் கூட்டும். உத்தியோகத்திலும் வர்த்தகத்திலும் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அனாவசியச் சிக்கல்கள் தானே விலகி, எதிரிகளின் தொல்லை மறையும். மகிழ்ச்சி இருமடங்காகும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அமைதி நிறைந்த நாளாக அமையும். தமது பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவர். தேவையான பணப்புழக்கம் சீராக இருக்கும். தெய்வீக சிந்தனைகளும் வழிபாடும் மேலோங்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டு ஈடுபடுவீர்கள். வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு அவசியம்.

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகம் பொங்கும் நாளாக அமையும். மகிழ்ச்சி இருமடங்காகும். தமது பணிகளைச் சுறுசுறுப்புடன் மேற்கொள்வீர்கள். இல்லத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி கூடும். சுபச் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினருடன் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றிவாகை சூடும் நாள். திறம்படச் சிந்தித்து செயலாற்றுவீர்கள். சமுதாயத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். தெய்வீக வழிபாடு மனதிற்கு அமைதி தரும். தேவையான தனவரவு கிடைக்கும். செலவுகளைச் சமாளிக்கும் நிதிநிலை சீராகும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் சற்றே அதிகரிக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு தேவை. வீண் விரயச் செலவுகளைத் தவிர்த்து, ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தள்ளிப்போடுங்கள். நீண்ட தூரப் பயணங்களின் போது உடைமைகளில் கவனம் கொள்வது அவசியம்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் ஆர்வம் மேலோங்கி, புதிய விஷயங்களை எளிதில் கற்றுத் தேர்வீர்கள். அனாவசிய எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். இல்லத்தில் உறவினர் வருகையால் சுபச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அன்பும் பாசமும் பெருகி, உறவுகளில் இணக்கம் உண்டாகும் நாள். உறவினர்களுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் கூடும். உத்தியோகத்தில் சிறுசிறு சவால்கள் எழலாம்; உயர் அதிகாரிகளுடன் இணக்கமாகச் செயல்படுவது நலம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுப்பீர்கள். தேவையான தனவரவு கிடைக்கும். நீண்டதூரப் பயணங்களால் உடல் அலைச்சல் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நற்பலன்கள் கூடும் நாளாக அமையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் சீராகும். நீண்டதூரப் பயணங்கள் ஆதாயம் தரும். உத்தியோகத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான முயற்சிகள் வெற்றியடையும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பெயரும் புகழும் அந்தஸ்தும் உயரும். தமது தேவைகள் பூர்த்தியாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான ஆதாயம் கிட்டும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே தொய்வு ஏற்படலாம். உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு கொள்வது அவசியம்.

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது அவசியம். நிதானத்துடன் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உயர் அதிகாரிகளுடன் உரையாடும்போது அனுசரணையுடன் அணுகவும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். தெய்வீக வழிபாடு நன்மைகளைத் தரும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online