மேஷம்
மேஷ ராசியினர் இன்று அனைத்துச் செயல்களிலும் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். சிறு பிழைகளாலும் மறதியாலும் இடர்கள் நேரலாம். முக்கியப் பணிகளைப் பதிவு செய்துகொள்ளுதல் உத்தமம். முக்கியக் கூட்டங்கள், நேர்காணல்கள், புதிய ஒப்பந்தங்கள் போன்ற தருணங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் இன்று எந்த விஷயத்திலும் அளவற்ற எதிர்பார்ப்புகளைத் துறக்க வேண்டும். சிறு ஏமாற்றங்களால் மனச்சோர்வு தோன்ற வாய்ப்புள்ளது. கடமையாற்றுங்கள்; பலனை எதிர்பார்க்காதீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கமும் பிள்ளைகளால் மனமகிழ்ச்சியும் கிட்டும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று மன உறுதியுடன் செயலாற்றுதல் அவசியம். மனதிற்கு உகந்தவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். விருப்பமான சில விஷயங்கள் கைநழுவிச் செல்லக்கூடும். பணி மற்றும் வணிகத்தில் சிறப்பு கவனம் தேவை. செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். வணிகத்தில் கடன் அடிப்படையில் வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்
கடக ராசியினருக்கு இன்று வேகத்தை விட விவேகம் மேலோங்கும். ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுவீர்கள். புறத்தோற்றம் பொலிவுற்று, வசீகரம் கூடும். உறவுகளிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சமூக அரங்கில் சிறப்புப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை இன்று பணிச்சுமை அதிகரிக்கும். நாள் முழுதும் அயராத உழைப்பில் ஈடுபடுவீர்கள்; காலத்தின் ஓட்டம் புலப்படாது. நீண்ட தூரப் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகக்கூடும். குறித்த நேரத்தில் சத்தான உணவை உட்கொண்டு, போதிய நீரை அருந்துங்கள். நன்மைகளே விளையும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று குழப்பங்கள் சற்று அதிகரிக்கலாம். புதிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். உறவுகளுடன் வாக்குவாதங்களை மேற்கொள்ள வேண்டாம். பணப் பரிமாற்றங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை அவசியம். இறைவழிபாடு மன அமைதியைத் தரும்; நன்மைகள் விளையும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக அமையும். ஆர்வம் மிகுதியாகும். புதிய விஷயங்களை எளிதாகக் கற்றுக்கொள்வீர்கள். பணி மற்றும் வணிகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். வணிகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை ஈட்டித்தரும். இன்று எதிர்பாராத இலாபங்கள் கிட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்று மனநிறைவு கூடும் நாளாக அமையும். தேவைப்படும் தருணங்களில் உரிய உதவிகள் கிட்டும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உன்னதத்தைப் புரிந்துகொள்வீர்கள். பகைவர்களும் நண்பர்களாக மாறக்கூடும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக அமையும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திறம்படச் சிந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அநாவசியமான விஷயங்கள் தானாகவே விலகும். விவசாயிகளுக்குச் சிறந்த முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இன்று நற்பலன்கள் உங்களைத் தேடி வரும்.
மகரம்
மகர ராசியினர் இன்று பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவசரத்தையும் முன்கோபத்தையும் தவிர்க்கவும். நற்பலன்கள் கைநழுவிச் செல்ல வாய்ப்புள்ளது. நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட்டால், அனைத்தும் நல்லபடியாக அமையும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வீண் சந்தேகங்களைத் தவிர்த்தல் நலம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று போதுமான ஓய்வு கிட்டும். ஆழ்ந்த நித்திரை உண்டாகும். சத்தான உணவு மனநிறைவை அளிக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் சுபச் செலவுகள் உண்டாகலாம். பணி மற்றும் வணிகத்தில் சுமுகமான சூழல் நிலவும். செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று சற்று மனப் பயம் ஏற்படக்கூடும். புறச்சூழலில் சிறு இடர்பாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கவும். தேவையற்ற வாக்குவாதங்களில் இருந்து விலகியிருப்பது சிறப்பு. எத்தகைய விமர்சனங்களுக்கும் மௌனமே பதிலாக இருக்கட்டும். இறைவழிபாடு மன அமைதியை நல்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


