மேஷம்
இன்று தனலாபம் பெருகும் நன்னாள். வருமான ஆதாரங்கள் வலுப்பெறும்; புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். தொழில் விரிவாக்கத்திற்கும், புதிய முதலீடுகளுக்கும் உகந்த காலம். குடும்ப விவகாரங்களில் நிதானம் அவசியம். மூன்றாம் நபரின் தலையீட்டைத் தவிர்க்கவும்; குடும்ப ரகசியங்களை பகிர்வதையும் தவிர்க்கவும்.
ரிஷபம்
இன்று உற்சாகமும் புத்துணர்வும் பொங்கும் நாளாக அமையும். முன்னாள் தடைகளை நீக்கி, வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். பணி மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்பும் மன அமைதியும் கிட்டும். எதிர்ப்புகள் அகலும். தூரப் பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
மிதுனம்
இன்று சுகபோக வாழ்வு அமையும். உணவு, உறக்கம் குறித்த காலத்தே அமையப்பெறும். செல்லும் இடங்களில் நன்மதிப்பு கூடும். பணி மற்றும் வியாபாரத்தில் மன நிம்மதி உண்டாகும். அனாவசியமான பிரச்சனைகள் அடியோடு விலகும். நிதி நிலைமை சீரடைந்து வலுப்பெறும். இறை வழிபாடு மன அமைதியை நல்கும்.
கடகம்
இன்று சற்றுக் கவனமுடன் செயல்பட வேண்டும். அனாவசியமான மனக் குழப்பங்கள் ஏற்படக்கூடும். பெரிய அளவிலான தடைகள் எழாது. துணிச்சலுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். புதிய முயற்சிகளில் சிறு தடுமாற்றம் இருப்பினும், விடாமுயற்சி கைவிடாதீர்; வெற்றி நிச்சயம் உங்கள் வசமே.
சிம்மம்
இன்று கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மறதி காரணமாக அனாவசியமான சிக்கல்கள் உருவாகலாம். எந்த செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்வி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மூத்தோர் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி
இன்று போதுமான ஓய்வு கிடைக்கும். உடல்நலம் குறித்த சங்கடங்கள் நீங்கும். கணவன்-மனைவி உறவில் இருந்த மனக்கசப்புகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் உன்னதமான முன்னேற்றம் உண்டாகும். அனாவசியமான தடைகள் விலகி நன்மைகள் சூழும்.
துலாம்
இன்று முன்கோபத்தைத் தவிர்க்கவும். உறவுகளிடம் சண்டைகளையும் வாக்குவாதங்களையும் முற்றிலுமாய் விலக்கவும். பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகளே விளையும். நிதானம் இழக்காதீர். பணி மற்றும் வியாபாரத்தில் நிதானமான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இறைவழிபாடு மன அமைதியை நல்கும். மனதை அமைதியாய் வைத்துக் கொள்வது உத்தமம்.
விருச்சிகம்
இன்று உங்கள் ஆர்வம் பெருகும். புதிய விஷயங்களை விரைவாகக் கற்றுத் தெளிவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் உன்னதமான முன்னேற்றம் கிட்டும். உங்கள் தனித்திறமைகள் மிளிரும். அறிவுசார்ந்த விஷயங்களில் உங்கள் மேன்மை வெளிப்படும்.
தனுசு
இன்று நீங்கள் அமைதியுடனும் சாந்தத்துடனும் விளங்குவீர்கள். முன்கோபத்தைக் கட்டுப்படுத்தி, மனதை சமநிலைப்படுத்துவீர்கள். சுய ஆறுதலை நாடி, மனதை உறுதிப்படுத்துவீர்கள். இனிய நாளாக அமைய உங்கள் அமைதியான அணுகுமுறையே துணை நிற்கும். பணி மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும்.
மகரம்
இன்று முன்கோபம் தலைதூக்க வாய்ப்புள்ளது. பொறுமையுடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் செயல்பட வேண்டும். அனாவசியமான எண்ணங்களை ஒதுக்கி, மனதை ஒருமுகப்படுத்தி கடமையில் கவனம் செலுத்துங்கள். மன அமைதிக்கு ‘ஓம் நமசிவாய’ மந்திர ஜபம் துணை நிற்கும்.
கும்பம்
இன்று மன அமைதி மிகவும் அவசியம். ஆர்ப்பாட்டமான செயல்களைத் தவிர்க்கவும். எல்லா விஷயங்களையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருத்தல் நலம். புதிய முடிவுகளை எடுப்பதைத் தள்ளிப் போடுவது உத்தமம். செலவுகளையும், அனாவசிய சிந்தனைகளையும் கட்டுக்குள் வையுங்கள். கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது போதுமானது.
மீனம்
இன்று சுகமும், ஆனந்தமும் நிறைந்த நாளாக அமையும். இல்லத்தில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் மீண்டும் இனிதே நடைபெறும். உங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டு, கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். காலத்தை வீணடிக்க மாட்டீர்கள். இன்று உங்கள் நாள் இனிய நாளாக அமையும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


