மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்று சுபபலன்கள் உண்டாகும். பகைமை பாராட்டியோர் மனமாறி, உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் நிலை மேன்மையுறும். நெடுநாள் பகைகள் நீங்கி, அமைதி குடிகொள்ளும். வருவாய் சீராக அமையும்; கடன் சுமைகள் குறையும். குடும்பத்துடன் இணைந்து இன்பம் காண்பீர்கள். மங்கலச் செலவினங்கள் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்று மன அமைதி கிட்டும். தெய்வ வழிபாடு மனதிற்குப் பேரமைதி அருளும். உங்களின் பிரார்த்தனைகள் பலிக்க, நற்சந்தர்ப்பங்கள் தானாகவே அமையும். புதிய காரியங்களில் துணிவுடன் ஈடுபடலாம். மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். இரவில் இனிமையான உறக்கம் கைகூடும் நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்று அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். வீட்டில் முடங்கிக்கிடந்த மங்கலச் செயல்கள் புத்துயிர் பெறும். சுபச் செலவினங்கள் நேரும். சந்தான பாக்கியம் வேண்டி காத்திருப்போருக்கு நற்செய்தி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, இன்று ஓய்வின்றி உழைக்கும் நாளாக அமையும். காலத்தின் அருமையை உணர்ந்து செயலாற்றுவீர்கள். குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். நீண்டதூரப் பயணங்களால் உடல் அசதி உண்டாகலாம். உடல் நலனில் சிறப்புக் கவனம் தேவை. சத்தான உணவினை உட்கொள்வது நலம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நற்பலன்கள் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்று மனமகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மன நிறைவு உண்டாகும். நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். சட்டரீதியான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சொத்து சேரும் யோகம் உண்டாகலாம்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்று புதிய முயற்சிகளில் துணிவுடன் ஈடுபட்டு, வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள். தேவையான தனவரவு கைகூடும். கடன் சுமைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வேறுபாடுகள் நீங்கி, அன்பு பெருகும். சகோதர உறவுகளில் ஒற்றுமை ஓங்கும். குடும்ப ஒற்றுமை நிலைபெறும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று நிதானமாகச் சிந்தித்து, செயல்பட வேண்டிய நாள். பலவிதமான மனக் குழப்பங்கள் அன்றாடப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தலாம். உயர் அதிகாரிகளுடன் வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்று வரவு செலவுக் கணக்குகளை உன்னிப்பாகக் கவனித்துச் செயல்படுவீர்கள். நிதி விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அனாவசியச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்று சுகபோக வாழ்க்கை அமையப் பெறும். செயற்கரிய காரியங்கள் யாவும் குறித்த நேரத்தில் நிறைவேறும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவு உண்டாகும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணும். உயர் பதவிகள் தேடிவரும் நற்சந்தர்ப்பங்கள் அமையும்.
மகரம்
மகர ராசி நேயர்களே, இன்று நற்பலன்கள் அருளும் நாளாக அமையும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். வியாபாரத்திலும், பணியிலும் திறம்படச் செயலாற்றிப் பாராட்டுப் பெறுவீர்கள். தேவையான தனவரவு கிடைக்கும். சுபச் செலவினங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினும், மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்று நட்பு வட்டாரத்தால் ஆதாயங்கள் பெருகும். நீண்டதூரப் பயணங்கள் மனநிறைவைத் தரும். சுபச் செலவினங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். உறவினர்களுடன் உரையாடும்போது வாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். அவசரப்பட்டு எக்காரியத்திலும் தலையிட வேண்டாம்.
மீனம்
மீன ராசி நேயர்களே, இன்று மனதில் சிறு கலக்கம் தோன்றலாம். பணிகளிலும், வியாபாரத்திலும் சில தடங்கல்கள் ஏற்படலாம். எனினும், பெரிய பாதிப்புகள் இருக்காது. எதிர்கொள்ளும் சவால்களைத் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றல் உங்களிடத்தில் வெளிப்படும். இறைவனின் பரிபூரண அனுகிரகம் கைகூடும் நாள் இன்று.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


