மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று மிகுந்த தனலாபம் கிட்டும். வணிகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள உகந்த நாள். வாரத்தின் துவக்க நாளே உங்கள் மனம் பூரிப்புடன் திகழும். உத்தியோகத்தில் எவ்வித பெரிய தடங்கல்களும் ஏற்படாது. உயரதிகாரிகளுடன் இணக்கமாகச் செயல்படுவது நலம். வரவைக்கொண்டு சேமிப்பில் ஆர்வம் காட்டுங்கள்; அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். உத்தியோகம் மற்றும் வணிகத்தில் உங்களது ஆதிக்கம் நிலைபெறும். மாணவர்களுக்கு கல்வித் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும். உடல்நலக் குறைபாடுகள் சீரடையும். தேவையற்ற விரயச் செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் நீண்டகால மனச்சுமைகள் நீங்கி, மகிழ்ச்சி இருமடங்காகும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று பெயர், புகழ், அந்தஸ்து பெருகும் நாள். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். இழந்த சொத்துக்களை மீட்கும் வழிகள் புலப்படும். சட்டப்பூர்வமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இறைவழிபாடுகள் மேற்கொள்வது இல்லத்திலுள்ள பெண்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்று வருவாய் பெருகும் நாளாகும். தங்களுக்குத் தேவையான தனவரவு கைகூடும். உத்தியோகத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நீண்டதூரப் பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இயன்றவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று மன அமைதி நிறைந்த நாளாகும். தங்களுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள முதியோர்களின் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கடன் சுமை குறையும். தேவையற்ற அவப்பெயர்கள் அகன்று, இரவில் ஆழ்ந்த உறக்கம் கைகூடும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நீண்டதூரப் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தீராத பகைகள் விலகும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரும் வாய்ப்புகள் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்று மன உளைச்சல்கள் நீங்கி, தேவையற்ற சிந்தனைகள் விலகும். பகைகள் அகன்று, நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் நிலவிவந்த மனஸ்தாபங்கள் சரியாகும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சுமூகமான சூழ்நிலை அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்று நட்பின் வாயிலாகப் பல நற்பலன்கள் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் புத்துணர்ச்சியூட்டும் அனுபவங்களை நல்கும். மனதிற்கினிய வாழ்க்கைத்துணை அமையும் வாய்ப்பு உண்டு. சுப காரியங்களுக்கான தடைகள் நீங்கி, மங்களகரமான செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான வளர்ச்சி காணப்படும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று சுறுசுறுப்புடன் செயல்பட்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த அவப்பெயர்கள் அகலும். தேவையற்ற மன உளைச்சல்கள் நீங்கி, கடன் சுமையிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள். நிதி நிலைமை சீராகும்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாகும். தங்களுக்குத் தாங்களே ஊக்கமளித்து, தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் வணிகத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை மேலோங்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி உடல்நலம் சீரடையும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகளைத் தொடங்கவும், வணிகத்தைப் பெருக்கவும் உகந்த காலம். தங்களுக்குத் தேவையான தனவரவு கைகூடும். உறவினர்களுடன் நிலவிவந்த மனக்கசப்புகள் அகலும். நீண்டதூரப் பயணங்களால் சிறு உடல் அசதி ஏற்படலாம்; போதுமான நீர் அருந்தி உடல்நலத்தைப் பேணுவது அவசியம்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று தனம், தானியம் பெருகும் நன்னாளாகும். சீரான வருவாய் வாய்க்கும். உத்தியோகத்தில் சுறுசுறுப்புடன் தங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் உண்டாகும் உடல் அசதியைத் தவிர்க்க ஓய்வு தேவை.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


