நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 01 ஜூலை 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 01 ஜூலை 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு ஆகியன குவியும் நன்னாளாக அமையும். இம்மாதத்தின் துவக்க நாள் உன்னதமான பலன்களைத் தரும். இன்று மேற்கொள்ளும் நற்பயணங்கள் எதிர்காலத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தரும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும், எதிர்காலத்திற்கான சேமிப்பைத் திட்டமிடவும் இது உகந்த நேரம். நற்காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த மங்கல நிகழ்வுகள் மீண்டும் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்று உற்சாகம் பொங்கும் இனிய நாளாக விளங்கும். சுறுசுறுப்புடன் செயலாற்றி, தெளிவான சிந்தனையுடன் முடிவுகளை மேற்கொள்வீர்கள். மனதில் குடிகொண்டிருந்த அனாவசிய ஐயங்கள் அகலும். இம்மாதத்தில் பல நற்காரியங்களைச் சாதிக்கத் திட்டமிடுவீர்கள். தங்களின் எதிர்காலக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று மனோதிடம் பெருகும். உறுதியான முடிவுகளை மேற்கொண்டு, தங்களின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மாட்டீர்கள். தன்னம்பிக்கையானது தங்களை வாழ்க்கையில் உன்னத முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குறித்த நேரத்தில் உணவு, போதுமான உறக்கம் இவை நற்பலன்களை நல்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்று உற்சாகமும் சுறுசுறுப்பும் நிறைந்த நாளாக அமையும். தங்கள் மனதில் நினைத்திருந்த சுபகாரியங்கள் நிறைவேறும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இன்று தாங்கள் மேற்கொள்ளும் சகல காரியங்களும் லாபகரமாக நிறைவடையும். இறைவனுக்கு நன்றி செலுத்தி, ஏழை எளியோருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்று அடக்கத்துடனும், பணிவுடனும் நடந்துகொள்வீர்கள். ஆடம்பர ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பீர்கள். உயரதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீண்டகாலப் பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். தேவையான நிதி தங்குதடையின்றி கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டு. முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்கவும். உடல்நலத்தில் சிறப்பு கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று உற்சாகம் பொங்கும் நாளாக அமையும். தாங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இதுநாள்வரை தலைகுனிந்திருந்த இடங்களில் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை உருவாகும். வியாபாரத்தை விரிவாக்கவும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும், வங்கிக் கடன் பெறவும் முயற்சிக்கலாம். வாடகை வீடு தேடுவோருக்கு நல்லில்லம் வாய்க்கும். வேலை தேடுவோருக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று நட்பு வட்டாரத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகம் புதிய அனுபவங்களையும் ஞானத்தையும் அளிக்கும். வியாபாரத்தில் தங்களின் தன்னம்பிக்கை பெருகும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற தங்களின் தீவிரம் உங்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். செலவினங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாளாக அமையும். திறம்படச் சிந்தித்து செயலாற்றுவீர்கள். சிறு சிறு ஆசைகளும், எதிர்பாராத மகிழ்ச்சிகளும் நிறைவேறும். சிலருக்கு நிதிநிலை சற்றுக் குறையலாம். எனினும், ஊதியம் வந்ததும் அனைத்தும் சீராகும், கவலையேதுமில்லை. அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். பல நற்காரியங்களை மேற்கொண்டு, இனிமையான சொற்களைப் பேசுவீர்கள். சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். பிறருக்கு உதவும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்று நலமும் சுகமும் நிறைந்த நாளாகப் பரிமளிக்கும். குறித்த நேரத்தில் உண்ணும் நல்ல உணவும், போதுமான உறக்கமும் இன்றைய நாளை இனிமையாக்கும். தேவையான நிதி வசதி தங்குதடையின்றி கிடைக்கும். வாராக் கடன்கள் வசூலாகும். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்கும் நல்வாய்ப்பு உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தையும் அவசர முடிவுகளையும் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மன நிம்மதி குலைய வாய்ப்புகள் உள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று மன நிம்மதி கிட்டும். தங்கள் செய்த பிழைகளை உணர்ந்து, மன்னிப்பு கோரும் மனோபாவம் மேலோங்கும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சுமுகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். நிதி நிலைமை சீராகி, தேவையான பணம் தங்குதடையின்றி கிடைக்கும். இரவில் அமைதியான உறக்கம் கிட்டும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online