நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று செயல்வேகம் மிகுந்த நாளாக அமையும். சோம்பலைத் தவிர்த்து, தங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றுவீர்கள். காலத்தை வீணாக்காமல், பயனுள்ள செயல்களில் ஈடுபடுவீர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். பகைவர்களையும் மன்னிக்கும் பெருந்தன்மை வெளிப்படும். இரவு நேர நித்திரை அமைதியானதாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றிக் கொடி நாட்டும் நாளாக அமையும். உத்தியோகத்திலும் வணிகத்திலும் சுறுசுறுப்புடன் செயலாற்றுவீர்கள். மனோதிடம் மேலோங்கும். உள்ளத்தில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் கௌரவமும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் ஓர் முன்மாதிரியாகத் திகழும் நாள் இது.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி நிறைந்த நாளாக அமையும். உள்ளத்துச் சஞ்சலங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மங்கல காரியங்களுக்கு இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகத்திலும் வணிகத்திலும் சீரான போக்கு காணப்படும். பகைவர்களும் நட்பு பாராட்டுவர். தெய்வ வழிபாட்டால் மன அமைதி கிட்டும்.

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று போட்டி மனப்பான்மையும் பொறாமையும் மேலோங்கும் நாளாக அமையும். மனம் அலைபாயக்கூடும். பிறரின் வாழ்க்கை நிலையை ஒப்பிடுகையில் சிறு தடுமாற்றம் ஏற்படும். எனவே, நிதானத்துடன் சிந்தித்துச் செயல்படுங்கள். அவசரம் கூடாது. தெய்வ வழிபாடு மனநிறைவைத் தரும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று போட்டி மிகுந்த நாளாக அமையும். பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். அநாவசிய மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நாளைக் கடக்க பொறுமை மிகவும் அவசியம். புதிய பகைமைகளை வளர்க்க வேண்டாம். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு பேணவும். கூடுமானவரை நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நிதானம் கைகூடும் நாளாக அமையும். தங்கள் காரியங்கள் உரிய நேரத்தில் நிறைவேறும். கடமைகளைத் தவறாமல் ஆற்றுவீர்கள். பொருளாதார நிலை சீராகும். கடன் சுமை தணியும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி உளம் மகிழ்வீர்கள். கணவன் மனைவி அன்னியோன்னியம் பெருகும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சங்கடங்கள் பெருகும் நாளாக அமையும். மனக் குழப்பம் நிலவும். பணியில் மிகுந்த கவனம் தேவை. வணிகத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். இருக்கும் வாடிக்கையாளர்களைப் தக்கவைப்பது உத்தமம். முன்கோபத்தைத் தவிர்க்கவும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நன்மை பயக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி பெறும் நாளாக அமையும். காரியத் தடைகள் நீங்கும். விநாயகர் வழிபாடு மனமகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்திலும் வணிகத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி, உடல்நலம் சீராகும். அநாவசியச் செலவுகள் கட்டுக்குள் வரும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகச் சிந்தனைகளில் மனம் ஈடுபடும். குலதெய்வ ஆலய தரிசன வாய்ப்புகள் கிடைத்தால், தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும், நன்மைகளே நிகழும். வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் மீண்டும் தொடங்கும். உத்தியோகத்திலும் வணிகத்திலும் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நிதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும். அலைச்சலின்றி இருப்பீர்கள். பணிவு குணம் வெளிப்படும். நன்றி உணர்வை வெளிப்படுத்துவீர்கள். மனதிலிருந்த ஐயங்கள் அகலும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் மன அழுத்தத்தைப் போக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று செயல்வேகம் கூடும் நாளாக அமையும். தங்கள் தனித்திறமை வெளிப்படும். உத்தியோகத்திலும் வணிகத்திலும் உரிய அங்கீகாரம் கிட்டும். வேகத்தைக் காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் சொற்களில் கம்பீரம் பொலியும். இந்நாள் பல நன்மைகளை உங்களுக்கு அருளும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நிலைமை சீரடையும். தேவைக்கேற்ப தனவரவு இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எனினும், அநாவசியச் செலவுகளைக் குறைப்பது எதிர்காலத்திற்கு நலம் பயக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணியில் முழு கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் செயல்படுவீர்கள். வணிகத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும் நாள் இது.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online