நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று வருவாய் பெருகும். வாராக்கடன்கள் வசூலாகும். நிதிநிலை சீரடையும். கடன் சுமை அகலும். குடும்பத்திற்குத் தேவையான பொன், பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். விநாயகப் பெருமானை தரிசிப்பது கூடுதல் நற்பலன்களைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று கோபத்தைக் கட்டுப்படுத்துவது நலம். எவ்விஷயத்திலும் அவசரம் தவிர்ப்பது சிறப்பு. அவசியமான செலவினங்களை மட்டும் மேற்கொள்வது உத்தமம். வீண்விரயச் செலவுகளை அறவே தவிர்க்கவும். பணியிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பல்வேறு நன்னம்பவங்களைப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் மேன்மைகளை உணர்வீர்கள். பல்லாண்டு காலப் பிரச்னைகள்கூட எளிதில் விலகும். தக்க தருணத்தில் துணை கிட்டும். இறை நம்பிக்கை மேலோங்கும். பணியிலும் வணிகத்திலும் நிலவிய இடர்ப்பாடுகள் நீங்கும் நாள் இது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு ஆகியன குவியும் நன்னாளாக அமையும். பணியிலும் வணிகத்திலும் பெரும் முன்னேற்றம் காணலாம். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மனதில் குடியிருந்த கவலைகள் அகன்று, அமைதி தவழும். வாழ்வில் வெற்றிபெற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் தரும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நற்பலன்கள் உண்டாகும் நாளாகும். பணியிலும் வியாபாரத்திலும் உற்சாகம் பொங்கும். இல்லத்தரசிகளுக்கு மனநிறைவான நாள் இது. விருந்தினர்களின் வருகையால் சுபச் செலவுகள் ஏற்படலாம். பணிச்சுமை சற்று அதிகரித்தாலும், மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டுடன் அந்தஸ்தும் உயரும் நன்னாள் இது. வருவாய் அதிகரிக்கும். பகைவர்களின் சூழ்ச்சியிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் ஒளிமயமான எதிர்காலம் அமையும். வியாபாரத்தில் இழந்ததை மீண்டும் பெறுவீர்கள். பயணங்களால் மனதில் அமைதி குடிகொள்ளும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாழ்வில் உயர்வடைய இறைவனின் அருளால் நல்வழிகள் புலப்படும். கிடைக்கும் நல்வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுயநலச் சிந்தனைகளைத் தவிருங்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது உத்தமம். நற்பலன்கள் நிச்சயம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும். பெருமையுடன் தலைநிமிர்ந்து பேசக்கூடிய சூழல் உருவாகும். மனதில் இருந்த பாரங்கள் நீங்கும். தலைகுனிந்து நின்ற இடங்களில் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நல்வாய்ப்புகள் தேடிவரும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். வறுமை நீங்கி வளமை பெருகும். இன்று ஒரு வளமான நாளாக அமையும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று முன்கோபம் அதிகரிக்கலாம். இதனால் நல்வாய்ப்புகளை இழக்கும் சூழல் ஏற்படலாம். மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். பெரியோர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பது சிறப்பு. குறிப்பாக இளைஞர்கள் எவ்விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நன்மை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத தனவரவு வந்து சேரும். காதல் கைகூடி, திருமண பந்தத்தில் இணைய வழி பிறக்கும். நெடுநாள் கனவான பொன், பொருள்கள் சேர்க்கையால் மகிழ்வீர்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த சுப காரியங்கள் இனிதே தொடங்கும். பணியிலும் வணிகத்திலும் சுமூகமான சூழல் நிலவும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்கள் இன்று ஆக்கபூர்வமான எண்ணங்களுடன் நற்செயல்களை மேற்கொள்வீர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். பணியிலும் வணிகத்திலும் சீரான முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுவோருக்கு நற்செய்திகள் காத்திருக்கின்றன. கூடுமானவரை நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். செலவினங்களைக் குறைப்பது நன்மை தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமும் அமைதியும் குடிகொள்ளும் நாளாக அமையும். தமது கடமைகளிலிருந்து தவறாமல் செயல்படுவீர்கள். இன்று பல புதிய அனுபவங்கள் கிட்டும். வாழ்க்கைத் துணையுடன் நிலவிய மனஸ்தாபங்கள் அகலும். பணியிலும் வணிகத்திலும் நிலவிய இடர்ப்பாடுகள் நீங்கி சுபம் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். நிதி நிலைமை சீரடையும். மகிழ்ச்சி பெருகும் நன்னாள் இது.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online