நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

Qries

– Advertisement –

தட்சன்ய புண்ணிய காலம் என்று கூறக்கூடிய காலமானது ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் அதிக அளவில் தெய்வ வழிபாடு இருக்கும். ஆடி மாதத்தில் அம்மனின் வழிபாடும், பிறகு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம், மார்கழி மாதம் என்று நாம் பல வழிபாடுகளை மேற்கொள்வோம். அந்த அளவிற்கு வழிபாட்டிற்கு உகந்த காலமான இந்த காலத்தின் தொடக்க மாதம் என்பது ஆடி மாதமாக திகழ்கிறது. அதனால் இந்த ஆடி மாதத்தில் நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்குரிய பலன் நமக்கு அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக நாம் வழிபாடு செய்யும்பொழுது கிடைக்கும் பலனைவிட மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன் என்பது அதிகம். அதிலும் குறிப்பாக ஜபம் செய்வது என்பது மிகவும் உத்தமமான செயலாக திகழ்கிறது. மந்திரத்தையும் தெய்வத்தின் பெயரையும் ஜபம் செய்து கொண்டு இருக்கலாம். இந்த ஜெபத்திற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. விதிமுறைகளும் கிடையாது.
– Advertisement –

மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது சில விதிமுறைகளை நாம் பின்பற்றி ஆக வேண்டும். ஆனால் ஜெபத்தை நாம் உச்சரிக்கும் பொழுது எந்தவித விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமே கிடையாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் நாம் அந்த ஜெபத்தை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் தான் ஆடி மாதம் வாராகி அம்மனின் எந்த நாம ஜெபத்தை நாம் உச்சரித்தால் நாம் நினைத்தது நடக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
இந்த கலியுகத்தில் துடிப்பான தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். அம்மனை வழிபடும் பொழுது எதிரிகள் அற்ற நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனை நினைத்து வாராகி அம்மனின் நாமத்தை நாம் இந்த ஆடி மாதம் முழுவதும் உச்சரித்தோம் என்றால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திரும் என்று கூறப்படுகிறது.
– Advertisement –

இதை ஆடி மாதம் முழுவதும் உச்சரிக்க வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். குறைந்தது ஐந்து நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் வரை உச்சரித்தால் போதும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
பெண்களுக்கு தீட்டு காலமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். வீட்டில் அசைவம் சமைத்து இருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். வேறு ஏதாவது தீட்டு காரியங்களுக்கு போய்விட்டு வந்திருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அந்த அளவிற்கு மிகவும் நாம ஜெபம் என்பது நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவக்கூடிய மிகவும் எளிமையான ஒரு ஜெபமாக கருதப்படுகிறது
– Advertisement –

மந்திரம்
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நமஹ
இந்த நாம ஜெபத்தை கூறுவதற்கு முன்பாக நாம் எந்த காரியத்தை நினைத்து இந்த ஜெபத்தை செய்கிறோமோ அந்த காரியத்தை வாராகியம்மனை மனதார நினைத்துக் கொண்டு அந்த காரியத்தையும் நினைத்துக் கொண்டு பிறகு இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்க வேண்டும். யாரிடமும் இந்த மந்திர நாம ஜெபத்தை செய்கிறோம் என்பதை கூறக்கூடாது. எந்த காரியத்திற்காக செய்கிறோம் என்பதையும் கூறக்கூடாது.
இதையும் படிக்கலாமே: சிவன் அருள் பெற மந்திரம்
மிகவும் எளிமையான இந்த நாம ஜபத்தை வராகி அம்மனின் மீது முழு நம்பிக்கை வைத்து தினமும் உச்சரிப்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நிறைவேறும்

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam