ஆவணி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஆவணி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகளை தரும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சுபகாரியங்கள் எளிதில் நடந்திடும். திருமணம் முயற்சிகள் வெற்றி அடையும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தாலும் புதிய தொழிலில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் இந்த மாதம் சிறப்பான பலன்களை பெற முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருவண்ணாமலை அண்ணாமலையாரை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நன்மையை தரும். பழைய வீட்டையோ வாகனத்தையோ புதுப்பிக்கும் சூழ்நிலை உண்டாகும். சிறிய முயற்சி கூட மிகப் பெரிய வெற்றியைத் தரும். உடன் பிறந்தவர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் பெறுவதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது என்பது சற்று சிரமமாக இருக்கும். அதே சமயம் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையேல் அதனால் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை மேற்கொண்டு அகலக்கால் வைக்காமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பிரகதீஸ்வரரை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். பிறருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனக்கவலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடலாம். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அலைச்சல் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வரவு உண்டாகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற வீண் பேச்சுகளை பிறரிடம் பேசாமல் இருப்பது முன்னேற்றத்திற்கு நல்ல வழி காட்டும். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்பாமல் தாமே அந்த வேலையை செய்வதால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் போட்டிகளை சமாளிக்கும் அளவிற்கு தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களால் வெற்றிகள் உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். செலவுகளும் குறைவாகவே இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. புதிய நபர்களின் தொடர்பால் நன்மைகள் உண்டாகும். வருமானம் பெருகும். பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நல்ல பெயரை பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் மருத்துவ செலவு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலை ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் வெற்றிகள் உண்டாகும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க கடுமையாக முயற்சி செய்வீர்கள். இதுவரை தொழிலில் இருந்து வந்த எதிரிகள் பிரச்சனை முற்றிலும் நீங்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நாராயணரை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சினையாக இருந்தாலும் உடனே சரி செய்து கொள்வது நல்லது. எந்த அளவிற்கு தன்னுடைய உடல்நலத்தில் கவனமாக இருக்கிறீர்களோ அதே அளவிற்கு குடும்பத்தாரின் உடல் நலத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உற்றார் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பாராத திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லவும் நேரிடும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். முடிந்த அளவிற்கு கூடுதல் கவனம் செலுத்தி செலுத்துவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பழனி முருகனை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக காத்திருந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழ்நிலை நடைபெறும். சமூகத்தில் அந்தஸ்து கௌரவமும் உயரும். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மேலோங்கும். அதேசமயம் தேவை இல்லாமல் பேசுவதால் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்து வந்த போட்டிகள் அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் சுயமாக யோசித்து எடுக்க வேண்டுமே தவிர்த்து பிறரின் பேச்சைக் கேட்டு எடுக்காமல் இருப்பது நன்மையை தரும். குடும்பத்தில் மூத்தோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். பொறுமையுடனும் நிதானத்துடனும் அந்த வேலையை கவனமாக செய்து முடிப்பதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் பிரச்சனைகள் உண்டாக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நினைத்து வந்தவரை லாபத்தை அனுபவித்துக் கொள்ள வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடைகள் உண்டாகும். திருமணம் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை கூட உண்டாகும். அதனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிதாக வீடு வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நிதானத்துடன் எடுப்பது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை சாதகமற்ற சூழ்நிலையே நிலவுகிறது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பது சிரமமாகவே இருக்கும். அதேசமயம் வீண் பழிக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். தொழில் ரீதியாக இருக்கக்கூடிய போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிறு உபாதையாக இருந்தாலும் அதற்குரிய மருத்துவரை பார்த்து சரி செய்து கொள்வது நல்லது. இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் அனைத்தையும் சமாளித்து வெற்றி காணும் அளவிற்கு லாபம் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராகி அம்மனை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top