– Advertisement –
ராமபிரானுக்கு உகந்த திதியாக கருதப்படுவதுதான் நவமி. இது மாதத்தில் இரண்டு முறை வரும். வளர்பிறை நவமி தேய்பிறை நவமி என்று வரும். அஷ்டமி திதிக்கு அடுத்த நாள் வரக்கூடியது தான் நவமி திதி. இந்த திதியில் தான் ராமர் அவதரித்தார் என்பதால்தான் ராமநவமி என்று வழிபாடு செய்கிறோம். அப்படிப்பட்ட இந்த திதியில் ராமபிரானை நாம் வழிபாடு செய்யும்பொழுது ராமபிரானின் அருளோடு சேர்த்து சீதா பிராட்டியின் அருளும், அதே சமயம் அனுமனின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நவமி திதி அன்று கூற வேண்டிய ராமர் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
துரோகிகளையும் எதிரிகளையும் விரட்டி அடிக்க மந்திரம்
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தை தடுப்பதற்காக நல்லவர்கள் போல் வேஷம் போட்டு உடன் இருந்தே அவர்களுக்கு குழிப்பறிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம் வெளிப்படையாக நான் உனக்கு போட்டியாளனாக இருக்கிறேன், உன்னுடைய எதிரி என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எதிரியை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். அப்படி கண்டுபிடித்த பிறகு அவர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளலாம். ஆனால் துரோகிகளை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. நம்முடனே இருந்து நமக்கு நன்மைகள் செய்வது போலவே செய்து, நம்மை பெரும் கஷ்டத்திற்கு ஆளாக்கி விடுவார்கள்.
– Advertisement –
அப்படிப்பட்ட துரோகிகளால் பலரும் தங்களுடைய தொழிலை இழந்து, சொத்தை இழந்து, வாழ்க்கை இழந்து, ஏன் இன்னும் சிலர் தங்களின் உயிரை கூட மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எதிரிகள் மற்றும் துரோகிகள் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையுடன் இருந்தாலும் தெய்வத்தின் அருள் என்பது இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். அப்படி பாதுகாப்பாக இருப்பதற்கும் தங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய துரோகிகளையும் எதிரிகளையும் விரட்டி அடிப்பதற்கும் நவமி திதி அன்று ராமரை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த மந்திரத்தை நவமி திதி இருக்கும்பொழுது தான் கூற வேண்டும். நாளைய தினம் இரவு 7 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஒருமுறை மட்டும் கூறினால் போதும். வீட்டில் ராமர் படம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். அப்படி கூறும் பொழுது கையில் துளசி இலையை வைத்துக் கொண்டு கூறுவது என்பது இன்னும் அதிக பலனைத் தரும்.
– Advertisement –
வீட்டில் கூற இயலாது என்று நினைப்பவர்கள் அருகில் இருக்கும் ராமர் ஆலயத்திற்கு சென்று இந்த மந்திரத்தை கூறலாம். ராமர் ஆலயம் இல்லை என்பவர்கள் பெருமாள் ஆலயத்திற்கு போய் கூறலாம். பெருமானை ஆலயமும் இல்லை என்பவர்கள் ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு சென்றும் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம்.
மந்திரம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநந்தாய நாதாய சீதாயா பதயே நமஹ
இதையும் படிக்கலாமே:பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் குபேர மந்திரம்
எளிமையான ராமபிரானின் மந்திரத்தை ஒரே ஒருமுறை நாளை இரவு 7 மணிக்குள் கூறுபவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகள் மற்றும் துரோகிகளின் தொல்லைகள் முற்றிலும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam