நவம்பர் மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

நவம்பர் மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன நிறைவான மாதமாக சந்தோஷமான மாதமாக இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மனநிறைவு இருக்கும். சில பேருக்கு தொழில் காரணமாக வேலை காரணமாக நீண்ட தூர பயணம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பயணங்கள் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். காதல் கைகூடும். நிதி நிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். தீபாவளி செலவை ஈடுகட்ட நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். பணத்தை இழுத்துப் பிடித்து சேமிப்பீர்கள். இந்த மாதம் விநாயகர் வழிபாடு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எல்லா வேலையிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அலட்சியத்தை குறைத்துக் கொள்ளவும். சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், முறையான ஆவணங்கள் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தொழிலுக்கு முதலீடு செய்ய பணம் தேவை என்றால் வங்கியில் மட்டும் கடன் முயற்சி செய்யுங்கள். வீட்டில் குடும்ப உறவுகளோடு அனுசரணை தேவை. குறிப்பாக மாமியார் மருமகள் வாக்குவாதம் செய்யக்கூடாது. தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு இந்த மாதம் நன்மையை செய்யும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்லது நடக்கக்கூடிய மாதமாகத் தான் இருக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் கூட சரியாக புரிந்து கொள்வார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு மேனேஜரின் ஆதரவு கிடைக்கும். ஆதரவை ஏற்றுக் கொண்ட நீங்கள் இன்னும் உழைத்து நல்ல பெயரை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட காலம் பிரிந்த உறவுகள் ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். மனைவிக்கு பிடித்த பொருட்களை கணவன்மார்கள் வாங்கி கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினமும் முருகர் வழிபாடு நன்மையை செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் கூடுதல் உழைப்பை முதலீடாக போட வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எளிதில் மனது துவண்டு போகக்கூடாது. இரண்டு முறையோ, மூன்று முறையோ தோல்வி அடைந்த பின்னரும் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், இந்த மாதம் உங்களுக்கு இனிமையான மாதமாக அமையும். கொஞ்சம் சோம்பல் உள்ளவர்களுக்கு சில தடங்கல்கள், சில தோல்விகள் வரத்தான் செய்யும். வாழ்க்கை என்றால் ஏற்றத்தாழ்வு நிறைந்தது. ஆகவே, பிரச்சினைகள் வரக்கூடிய காலகட்டத்தில் மன உறுதியோடு நடந்து கொள்ளுங்கள். செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரையும் போது மனசு கஷ்டப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம்தோறும் பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமான மாதமாக தான் இருக்கும். வேலைகளை எல்லாம் சரியான நேரத்திற்கு முடிக்க அயராது உழைப்பீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்த புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உறவுகளோடு சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்பு இருக்கிறது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரை பற்றி இன்னொருவரிடம் புறம் பேசக்கூடாது. பொய் பேசக்கூடாது. நேர்மையாக நடந்து கொண்டால் குடும்பப் பிரச்சனைகளை சரி கட்டிவிடலாம். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு செய்து உங்கள் மனநிலையை சரி செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் ஓட்டம் நிறைந்த மாதமாக இருக்கும். ஒரு வேலையை முடித்தவுடன் அடுத்த வேலை வந்து நிற்கும். அந்த வேலையை முடிப்பதற்குள்ளகவே அடுத்த 10 வேலைகள் வரிசை கட்டிங் நிற்கும். கொஞ்சம் பிரஷர் அதிகமான மாதமாக இருந்தாலும், எல்லா பிரச்சனைகளையும் தாங்க கூடிய சக்தியை கடவுள் உங்களுக்கு கொடுத்திருப்பான். கவலைப்படாதீங்க, இந்த மாத இறுதியில் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து வெளிவரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேளுங்கள். மூன்றாவது நபரை முழுமையாக நம்பாதீர்கள். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சின்ன சின்ன சிக்கல்கள் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் வரக்கூடிய மாதமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். வியாபாரத்தில் பார்ட்னரை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. வேலை செய்யும் இடத்தில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை நன்றாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இல்லற வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து நடக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சந்தேகப்பட்டு கொள்ளக்கூடாது. பிரச்சனைகள் சுமூகமாக முடிய வேண்டும் என்றால் புரிதல் மிக மிக அவசியம்.  தினம் தோறும் அரச மரத்தடி பிள்ளையாரை வணங்கினால் நன்மை நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை நடக்கக்கூடிய மாதமாக தான் இருக்கின்றது. வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்கும். பெருசாக பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் மேல் அதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. எதிரிகளை குறைத்து எடை போடக்கூடாது. நன்மைகள் நடந்தாலும் உஷாராகவே இருக்க வேண்டும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அடுத்தவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தினம்தோறும் உக்கிர தெய்வ அம்மன் வழிபாடு நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை கையில் எடுத்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வர காத்துக்கொண்டிருக்கிறது. பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இருக்கும் வேலையை விட்டு வேறு ஒரு வேலைக்கு செல்ல வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட ஏதாவது தேர்வு எழுத வேண்டும் என்றாலும் முயற்சி செய்யலாம். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்களுக்கு இந்த மாதம் நன்மையை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபம் நிறைந்த மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதி நிலைமை சரியாகும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன் உங்கள் கையை வந்து சேரும். சொத்து பத்தில் அந்த பணத்தை முதலீடு செய்வீர்கள். மனதிருப்தியை அடைவீர்கள். வேலையில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். மேனேஜர் முதலாளி உடன் பணி புரிபவர் நெருங்கிய நண்பர் என்று நினைத்து, மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடாது. இந்த மாதம் சில இடங்களில் உண்மையை சொல்லாமல் நடித்தால் மட்டுமே, வாழ்க்கையை நடத்த முடியும். ஜாக்கிரதையாக இருக்கவும். தினமும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் சுமாரான மாதமாக தான் இருக்கப் போகின்றது. சில பல சண்டை சச்சரவுகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். வேலையிலும் சரி, தொழிலிலும் சரி, குடும்பத்திலும் சரி அனுசரணை தேவை. முன்கோபத்தை நீங்கள் குறைக்க வேண்டும். நான் சொல்வது தான் சரி, என்று ஒற்றைக்காலில் நிற்கக் கூடாது. அடுத்தவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக கணவன் மனைவி வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீண்ட தூர பயணத்தை கூடுமானவரை இந்த மாதம் தவிர்த்துக் கொள்வது நல்லது. தினமும் நரசிம்மரை மனதார நினைத்து வழிபாடு செய்தாலே உங்களுக்கு நன்மை நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் நிதி நிலைமையில் கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். அளவுக்கு அதிகமான செலவு உங்களை பிரச்சனையில் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தும். செலவை கட்டுப்படுத்துவது தான் இந்த மாதத்தில் நன்மை நடக்க ஒரே வழி. மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். தேவையற்ற நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் உங்களுடைய நேரத்தை அனாவசியமாக செலவழிக்க கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையை முடிக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அலட்சியப் போக்கோடு இருந்தால் பிரச்சனைகள் வரும். ஆக மொத்தம் இந்த மாதம் நீங்கள் நினைத்தபடி எதுவும் நடக்காது. நடக்கக்கூடிய விஷயங்களுக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். தினம்தோறும் முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top