– Advertisement –
அம்பாளுக்கு உரிய தினமாக கருதப்படுவது நவராத்திரி. அதேபோல் சிவபெருமானுக்குரிய தினமாக கருதப்படுவது சிவராத்திரி. வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அதை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் மாத சிவராத்திரி என்று வரும். அன்றைய நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் இந்த ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட
ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும், துயரங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் சமாளித்து அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாத பட்சத்தில் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் மேலே ஒருவித விரக்தி ஏற்படும். இந்த விரக்தியை போக்கி வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கு தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். நம்முடைய முயற்சிகளோடு தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் பொழுது கண்டிப்பாக முறையில் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அந்த வகையில் சிவபெருமானின் அருளை பெறுவதற்கு சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.
– Advertisement –
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மாத சிவராத்திரி நாளன்று இந்த மந்திரத்தை நாம் கூற வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தில் இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் கண்டிப்பான முறையில் சிவபெருமானின் படமோ அல்லது லிங்கமோ இருக்கும். அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.
பிறகு தங்களால் இயலும் பட்சத்தில் ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அந்த நேரத்தில் எதுவும் தனியாக செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் ஒரு டம்ளரில் சுத்தமான எச்சில் படாத தண்ணீரை எடுத்து சிவபெருமானுக்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை முழு மனதோடு சிவபெருமானை நினைத்து கூற வேண்டும்.
– Advertisement –
அப்படி கூறி முடித்த பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்று சிவபெருமானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தீர்த்தம் போல பருக கொடுக்க வேண்டும்.
மந்திரம்
– Advertisement –
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹிதன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
இதையும் படிக்கலாமே:நிறைவான செல்வத்தை பெற
பல அற்புதங்களை நம்முடைய வாழ்க்கையில் நிகழ்த்தக்கூடிய இந்த ஒரு வரி மந்திரத்தை முழு மனதோடு சிவபெருமானை நினைத்து சிவராத்திரி ஆன இன்று இரவு 12 மணிக்குள் கூறுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam