நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

தக்காளி சாம்பார் செய்முறை | thakali sambar preparation in tamil

தக்காளி சாம்பார் செய்முறை | thakali sambar preparation in tamil


– Advertisement –

இட்லி, தோசை என்று டிபன் ஐட்டத்திற்கு நாம் சட்னி சாம்பார் செய்வோம். இவ்வாறு செய்யக்கூடிய சாம்பாரில் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு பருப்பை சேர்த்து தான் செய்வோம். ஆனால் எந்தவித பருப்பும் சேர்க்காமல் வெறும் தக்காளி வெங்காயத்தை வைத்து சாம்பார் செய்யலாம். இந்த சாம்பாரின் சுவை மிகவும் அருமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த சாம்பாரை நாம் சாதத்துக்கும் ஊற்றி சாப்பிடலாம். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். அந்த தக்காளி சாம்பாரை எப்படி வைப்பது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 7பூண்டு – 10 பல்வெங்காயம் – 2தக்காளி – 4வெந்தயம் – 1/4 ஸ்பூன்கடுகு – 1/2 ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்சர்க்கரை – 1/4 ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்து
– Advertisement –

செய்முறை
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தோலுரித்த பூண்டு பற்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு ஒன்றிரண்டாக நறுக்கிய வைத்திருக்கும் ஒரு வெங்காயத்தை அதில் போட்டு இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தக்காளியை நறுக்கி அதையும் வெங்காயத்துடன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி அனைத்தும் வதங்கிய பிறகு அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி விடுங்கள். மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.
– Advertisement –

விசில் முற்றிலும் போன பிறகு குக்கர் மூடியை திறந்து இந்த வெங்காய தக்காளி விழுதை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆரிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரைக்கக்கூடாது. இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்றாக வெடித்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்க வேண்டும். பொன்னிறமாக வதங்கிய பிறகு இதில் பெருங்காயத்தூளை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு அதில் அரைக்கப் அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை இதில் ஊற்ற வேண்டும்.
– Advertisement –

பிறகு இதில் சர்க்கரையை சேர்த்து மிதமான தீயில் வைத்து மூன்று நிமிடம் கொதிக்க விட வேண்டும். அவ்வப்பொழுது கரண்டியை வைத்து கிண்டிவிட்டுக் கொள்ளுங்கள். மூன்று நிமிடம் கழித்து விருப்பமிருந்தால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி இறக்கலாம். மிகவும் சுவையான தக்காளி சாம்பார் தயார் ஆகிவிட்டது. இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். அதேபோல் சாதத்திற்கும் குழம்பாக பயன்படுத்தலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:முட்டை தோசை ரெசிபி
மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த தக்காளி சாம்பாரை வீட்டில் ஒரு முறை செய்து பார்ப்பதன் மூலம் எப்பொழுதும் சாப்பிடக்கூடிய அளவைவிட சற்று அதிகமாகவே அனைவரும் சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online