இந்த வார ராசிபலன் 03/03/2025 முதல் 09/03/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 03/03/2025 முதல் 09/03/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கும். உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்தோடு இருப்பீர்கள். சொன்ன நேரத்திற்கு, சொன்ன வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு, நல்ல பெயரும் வாங்குவீர்கள். பண பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்தவும். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நன்மையை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன தைரியம் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் பயப்பட மாட்டீர்கள். தலை நிமிர்ந்து தைரியமாக உண்மையை பேசுவீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் நீதிக்கு புறம்பாக நடந்து கொள்ள மாட்டீர்கள். குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். உண்மையை பேசுவீர்கள். இதனால் பல எதிரிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, வேலையில் நிதானம் தேவை. வியாபாரத்தை பொருத்தவரை நம்பிக்கை மிக மிக அவசியம். தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள் நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான நல்ல பலன்களை கொடுக்கக் கூடிய வாரமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக செய்ய முடியாத நல்ல காரியங்களை இந்த வாரம் செய்ய துவங்கலாம். காரியத்தடைகள் விலகும். சுப காரியங்கள் வீட்டில் நடக்க பிள்ளையார் சுழி போடலாம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலையில் ஆர்வம் காட்ட வேண்டும். இன்றைக்கான வேலையை இன்றே முடிப்பது நல்லது. நாளை என்று ஒருபோதும் தள்ளிப் போடாதீர்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். உடல் சூடு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. வெயிலில் வேலை செய்பவர்களுக்கு ஒரு குடை தானம் செய்யுங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. துணிச்சலாக சில விஷயங்களை தைரியமாக தொடங்கி விடுவீர்கள். ஆனால் போகப் போக என்ன செய்யப் போகின்றோம் என்ற மனபயம் உங்கள் ஆழ் மனதில் இருக்கும். ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு ஆயிரம் முறை சிந்திக்கலாம். செய்ய தொடங்கிய பின்பு வேறு வழியே கிடையாது. செய்துதான் ஆக வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, வேலையில் மட்டும் அக்கறை காட்டுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். நாளை என்ற வார்த்தையை தூக்கி தூர போடுங்கள். எதுவாக இருந்தாலும் அந்த விஷயத்தை அன்றே முடிப்பது, இந்த வார இறுதி நாட்களுக்கு மிக மிக நல்லது. நிறைய தண்ணீர் குடிக்கவும். வீதியில் நடந்து வியாபாரம் செய்பவர்களுக்கு செருப்பு வாங்கி தானம் செய்தால் நன்மை நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் நிறைந்த வாரமாக இருக்கும். அதுவும் உணவு சம்பந்தப்பட்ட வேலையை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையை பொறுத்தவரை கொஞ்சம் பிரச்சனைகள் வந்து போகும். உடன் வேலை செய்பவர்களாலும், மேலதிகாரிகளாலும் சில பிரச்சனைகள் வரலாம். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். புது வேலை தேடுவதை விட, இருக்கும் வேலையை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்று சிந்திப்பதே, புத்திசாலித்தனம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினமும் காகத்திற்கு உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வையுங்கள் நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிந்தனை நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. அன்றாடம் வேலையை பொறுப்போடு செய்கிறீர்களோ இல்லையோ, செய்யும் வேலை சரியாக வருமா நாம் எடுக்கும் முடிவு நன்மையை தருமா என்று சிந்தித்து, பாதி நேரம் வீணாகப் போகும். யோசிக்காமல் ஒரு வேலையை செய்யக்கூடாது சரிதான். அதற்காக யோசனை மட்டுமே இருந்தால் வேலை எப்படி நடக்கும். அனுபவ சாலிகளை உடன் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேற என்ன வழி என்பதை தேடுங்கள். அயராது உழைத்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு. தேவையற்ற மனிதர்களின் பேச்சைக் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தெளிவான பாதை கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். நிதி நிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் சுபகாரிய செலவுகள் ஏற்படும். மனைவி பிள்ளைகள் இவர்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். கமிஷன் தொழில் நல்ல முன்னேற்றத்தோடு காணப்படும். கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிதானம் தேவை. குறிப்பாக குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவசரப்படக்கூடாது கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஈகோ பிரச்சனை வரவே கூடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பெண்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள், அவர்களுடைய படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். முதலீட்டில் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்கக்கூடாது. வெயில் காலம் துவங்கிவிட்டது ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அக்கறை காட்ட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். அம்மன்ப வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியம் அதிகமாக இருக்கும். உங்களை மட்டம் தட்டியே வேலை வாங்கியவர்களிடத்தில், துணிக்கலோடு பேசுவீர்கள். உங்களுக்கான சுதந்திரத்தை கேட்டு வாங்கிக் கொள்வீர்கள். எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பது என்று எண்ணம் உங்களிடத்தில் வந்துவிடும். தாழ்வு மனப்பான்மையை நீக்கி, வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல அத்தனை முயற்சிகளும் நீங்கள் மேற்கொள்ளலாம். உங்களுக்கு துணையாக அந்த இறைவன் நிச்சயம் இருப்பான். மற்றபடி வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். எதுவாக இருந்தாலும் கட்டுப்பாடுகள் இருக்கட்டும். கடன் கொடுக்கல் வாங்கலில் கூட சாட்சி வேண்டும். எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை அடையும். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் மீது ஆர்வம் காட்டக்கூடாது. எதுவாக இருந்தாலும் உழைத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடன் வேலை செய்பவர்களாக இருந்தால் கூட அவர்களை முழுசாக நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லாதீர்கள். வியாபாரத்தில் பாட்னரோடு நெருங்கிய நட்புறவு இருந்தாலும், கணக்கு வழக்குகள் வேறு, நட்புறவு என்பது வேறு என்று இருக்க வேண்டும். சொந்தத்தையும் வியாபாரத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. எதுவாக இருந்தாலும் தெளிவோடு நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் வாராகி அம்மனை கும்பிடுங்கள் எதிரியால் வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான லாபத்தை கொடுக்கக்கூடிய வாரமாக இருக்கும். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருக்கும் வியாபாரிகள் முதல், பெரிய தொழில் அதிபர் வரை நீங்கள் நினைத்த வேலைகளை தைரியமாக செய்யலாம். நல்ல முன்னேற்ற பாதையில் உங்கள் வாழ்க்கைச் செல்லும். தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவாக அலுவலகப் பணிகளை செய்யக்கூடாது. நேரத்திற்கு கொடுத்த வேலையை முடிப்பது நல்லது. யாருக்கும் வாக்கு கொடுத்துறாதீங்க. சொன்ன வாக்கை காப்பாற்றாமல் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை ஊர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளை விளக்கு போட்டு வழிபடுங்கள். ‌
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். செலவுக்கு ஏற்ற கையில் பண இருப்பு இருக்கும். கொஞ்சம் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மாத கடைசியில் பிரச்சனை வர வாய்ப்புகள் இருக்கிறது. நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் எப்போதும் கவனம் தேவை. மற்றபடி உங்களுடைய டார்கெட்டை எல்லாம் சரியாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் அகல கால் வைக்கக் கூடாது. எதிலும் நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகளை சாப்பிடாதீங்க. அதிக வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம். காலபைரவர் வழிபாடு உங்கள் கஷ்டத்தை குறைக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top