நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

சோயா புதினா புலாவ் | Soya puthina pulao

சோயா புதினா புலாவ் | Soya puthina pulao


– Advertisement –

சோயா உருண்டைகளுடன், புதினாவை அரைத்து ஊற்றி செய்யப்படும் இந்த புலாவ் ரொம்பவே ருசியாக இருக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சோயா புதினா புலாவ் நம் வீட்டிலேயே எப்படி சுலபமாக சுவையாக தயாரிக்கப் போகிறோம்? என்னும் சமையல் குறிப்பு சார்ந்த பதிவினை பகிர இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
சோயா புதினா புலாவ் செய்ய தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – ஒரு கப்தண்ணீர் – ஒன்றரை கப்சோயா சங்க்ஸ் – ஒரு கப்பெரிய வெங்காயம் – ஒன்றுகேரட் – ஒன்றுஉருளைக்கிழங்கு – ஒன்றுபச்சை பட்டாணி – ஒரு கைப்பிடிபட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அண்ணாச்சி பூ, ஜாதிபத்திரி, சோம்பு, பிரிஞ்சி இலை – தலா ஒன்றுநெய் – 2 டேபிள் ஸ்பூன்முந்திரிப் பருப்பு – 10மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஅரைக்க:புதினா இலைகள் – இரண்டு கைப்பிடிபூண்டு பற்கள் – ஐந்துஇஞ்சி – ஒரு துண்டுபச்சை மிளகாய் – 4
– Advertisement –

சோயா புதினா புலாவ் செய்முறை விளக்கம் :
சோயா புதினா புலாவ் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ரெண்டு கைப்பிடி அளவிற்கு புதினா இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஐந்து பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு இன்ச் அளவிற்கு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் உங்கள் காரத்தின் அளவிற்கு ஏற்ப 4 அல்லது 5 பச்சை மிளகாய் எடுத்து மிக்ஸர் ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கர் ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். புலாவ் செய்யும் பொழுது நெய் சேர்த்தால் ருசி கூடும். காய்ந்ததும் பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்களை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின் முந்திரிப் பருப்புகளை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின் இதனுடன் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து வதக்குங்கள்.
– Advertisement –

பின்னர் இதனுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கேரட், உருளைக்கிழங்குகள், பட்டாணி, 10 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்து வைத்துள்ள சோயா உருண்டைகள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அனைத்தும் நன்கு வதங்கியதும், அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட்டையும் சேர்த்து வதக்கி விடுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு மல்லித்தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:மரண பயம் நீக்கும் பிரதோஷ மந்திரம்
பின்னர் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். மிக்ஸர் ஜாரை கழுவிய தண்ணீரையும் நீங்கள் இந்த அளவில் சேர்க்கலாம். பின்னர் ஒரு முறை நன்கு கலந்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் மீதமிருக்கும் நெய்யை சேர்த்து குக்கரை மூடி வையுங்கள். இரண்டு விசில் விட்டதும் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியதும், திறந்து பார்த்தால் சுடச்சுட சூப்பரான சோயா புதினா புலாவ் சுவையான முறையில் ரெடி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, எல்லோருக்கும் பிடிக்கும்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online