ஆனி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

ஆனி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். உங்களுடைய வசீகரத் தோற்றத்தால் பேசிப் பேசியே எல்லா காரியத்தையும் சரி கட்டி விடுவீர்கள். திறமை வெளிப்படும். வேலை காரணமாக சில பேர் வெளியூர் பயணங்கள் செல்லவும். வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி வியாபாரத்தை விரிவுபடுத்த கூடுதல் முயற்சிகளை எடுக்கலாம். புதிய நண்பர்களின் நட்பு புது அனுபவத்தை கொடுக்கும். நல்லது நடக்கும். இந்த மாதம் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது, உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் அதிகாரத்தோரனை வெளிப்படும். அடுத்தவர்களை முதலாளித்துவத்தோடு ஆளுமை செய்வீர்கள். சில பேருக்கு ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். கடன் பிரச்சனை குறையும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். பார்ட்னரோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. தினமும் சிவ பெருமான் வழிபாடு நன்மையை தரும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும். கைக்கு வரும் பணத்தில் உங்களுக்கு தேவையான சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கை துணைக்கு தேவையான ஆடை ஆபரண பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை வியாபாரம் எல்லாம் எப்போதும் போலத்தான் செல்லும். யாரையும் அனாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. முன்கோபம் குறைய வேண்டும். வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மனை வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபம் நிறைந்த மாதமாக தான் இருக்கும். ஆனால் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் வரிசை கட்டி நிற்கும். செலவுகளை சமாளிக்க, வருமானத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி விடுங்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசம் தானாக விளக்கும். நல்லது நடக்கும். வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை ஹனுமனை வழிபாடு செய்யுங்கள் கூடுதல் நன்மையை பெறலாம். – Advertisement – சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை தரக்கூடிய மாதமாக இருக்கப் போகிறது. நீண்ட நாட்களாக செய்ய முடியாத நல்ல வேலைகளை இந்த மாதம் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த சுபகாரிய தடைகள் விலகும். சொத்து சுகம் வாங்க கூடிய நேரமும் காலமும் கைக்கூடி வரும். வாரா கடன் வசூல் ஆகும். மன நிம்மதியை அடைவீர்கள். சொந்த பந்தங்களோடு இருந்த பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். தினமும் குல தெய்வத்தை கும்பிடுங்கள். மேலும் நன்மைகள் நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் எதிர்பாக்காத நல்லது நிறைய நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. பணக்கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் குறையும். தேவைக்கு ஏற்ப பணம் உங்கள் கையை வந்து சேரும். நீண்ட நாள் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுங்கள் நன்மை உண்டு. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதம் ஊரோடு ஒத்து வாழ வேண்டும். நாலு பேர் எப்படி இருக்கிறார்களோ நீங்களும் அப்படி இருந்து கொண்டு செல்ல வேண்டும். என் வழி தனி வழி. நான் இதைதான் செய்வேன் என்று அடம்பிடித்து எந்த விஷயத்திற்கும் ஒற்றைக் காலில் நிற்கக்கூடாது. அனுசரணையாக நடந்தால் இந்த மாதம் பிரச்சனைகள் இல்லை. முன்கோபம் வேண்டாம். யாரையும் நம்பி, யாரிடமும் சவால் விடாதீங்க. வாக்கு கொடுத்து மாட்டிக்காதீங்க. தினமும் குல தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் மாதம் நிறைய நல்ல அனுபவங்களை கொடுக்க போகின்றது. நடக்கவே நடக்காது என்று தலையில் எழுதி வைத்த நல்ல விஷயங்கள் கூட இந்த மாதம் நடந்து விடும். இந்த சொத்து இனிமேல் விற்காது என்று பத்திரத்தை தூக்கி கிடப்பில் போட்டு இருப்பீர்கள். ஆனால் அந்த சொத்து நல்ல விலைக்குப் போக வாய்ப்புகள் உள்ளது. அரசாங்கம் உங்களுக்கு சாதகமாக நிறைய நல்ல வேலைகளை செய்து கொடுக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. சுப காரியங்கள் நடக்க துவங்கும். சனிக்கிழமை நரசிம்மர் வழிபாடு நன்மையை செய்யும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வாழ்க்கையில் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயரெல்லாம். மற்றபடி வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. நிதிநிலைமை சீர்படும். மேலதிகாரிகளுடன் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நல்லபடியாக முன்னேற்றச் செல்வீர்கள். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பதற்கு உண்டான அத்தனை சந்தர்ப்பத்தையும் கடவுள் உங்களுக்கு கொடுத்து விடுவான். வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு செய்வது சிறப்பு.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. எந்த இடத்திலும் முன்கோபம் வேண்டாம். அநாவசியமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வாராகி அம்மனை வழிபடுவது நல்லது.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனைவரின் ஆதரவும் நல்லபடியாக கிடைக்கும். தேவையற்ற எதிரிகளுடைய பிரச்சனை நீங்கும். எதிரிகளாகவே இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்களாக மாறிவிடுவார்கள். நிறைய எதிர்ப்புகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தை பொருத்தவரை எவ்வளவு உழைப்பை முதலியதாக போடுகிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவரை விளக்கு போட்டு வழிபடுங்கள் நன்மை நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் மாதம் சுகபோக மாதமாக இருக்க போகின்றது. நீங்கள் நினைத்த நல்லதெல்லாம் நடக்கும். வருமானம் சீராகும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவரும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையில் அப்படி இப்படி கொஞ்சம் டென்ஷன் இருந்தாலும் அதை சமாளித்துக் கொள்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். செலவை மட்டும் குறைத்துக் கொண்டால் இந்த மாதம் நீங்கள் தான் ராஜா. செவ்வாய்க்கிழமை முருகரை வழிபடவும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top