நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான தேவைகளுக்காக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பணத்தை சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அதையும் மீறி நாம் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணத்தை வைத்து நம்முடைய தேவைகளை அவ்வளவு எளிதில் பூர்த்தி செய்து கொள்ளவும் முடியாது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் நியாயமான முறையில் பணத்தை சம்பாதிக்கவும் சம்பாதித்த பணத்தை நியாயமான வழிகளில் வீண்விரயம் இல்லாமல் செலவு செய்யவும் கடன் பிரச்சனையில்லாத நிம்மதியான வாழ்க்கை வாழவும் அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்பவும் நாம் கொடுத்த பணம் நம்மிடமே திரும்பி வரவும் அனுதினமும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து அனைத்து விதமான பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு உதவக்கூடிய ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். – Advertisement -பண வரவை தரும் மந்திரம்ஒரு குழந்தை பிறந்த நொடியில் இருந்து அது இறக்கும் தருவாய் வரை ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் பணம் என்பது மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. அந்த குழந்தை வளர்வதற்கும் சரி, படிப்பதற்கும் சரி, வேலையில் சேர்வதற்கும் சரி, திருமணம் குழந்தை பேரு என்று நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கட்டங்களில் பணத்தேவை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். அதனால் பணத்தை தரக்கூடிய மகாலட்சுமி தாயாரை அனுதினமும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. பூஜைகள் கிடையாது. வழிபாடு கிடையாது. தினமும் பணம் வேண்டும் என்றால் தினமும் இந்த மந்திரத்தை நாம் கூற வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் மட்டும் கூறினால் போதும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு குளித்திருக்க வேண்டும், அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது, சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. முழு மனதோடு ஆத்மார்த்தமாக அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து மகாலட்சுமி தாயாரை நினைத்து குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் மட்டும் இந்த மந்திரத்தை கூறினால் போதும். அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூறலாம். – Advertisement – அந்த மந்திரம் தான் மகாலட்சுமி தாயாரின் மந்திரமான “ஸ்ரீம் ஐஸ்வர்யம்”. இந்த மந்திரத்தை முழு மனதோடு நாம் கூற கூற நமக்கு மகாலட்சுமியின் அருளால் ஐஸ்வர்யம் பெருகும்.இதையும் படிக்கலாமே: நவராத்திரி நாட்களில் கூற வேண்டிய புவனேஸ்வரி மந்திரம்எளிமையான இந்த இரண்டு வார்த்தை மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam