நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 01 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 01 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் சகவாசம், புதிய அனுபவங்கள் கிட்டும். கடந்த காலப் பிழைகளை உணர்ந்து திருத்திக் கொள்வீர்கள். வாழ்வில் முன்னேற்றத்திற்கான நல்வழி புலப்படும். இறை அருளுக்கு நன்றி செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலன்கள் பெருகும் நாளிது. ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி உடல்நலம் மேம்படும். சுபச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற விரயச் செலவுகள் கட்டுப்படும். மனக் குழப்பங்கள் நீங்கி நிம்மதி நிலைக்கும். இரவில் ஆழ்ந்த உறக்கம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழல் நிலவும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெருமைக்குரிய நாளாக அமையவிருக்கிறது. தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இதுவரை இருந்த அவப்பெயர் நீங்கி நற்பெயர் நிலைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். வெற்றியின் அகம்பாவம் ஏற்படுவது இயல்பே; ஆயினும், இயலாதவர்களுக்கு உதவுவது மேன்மையைத் தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நற்காரியங்கள் நடைபெறும் நாளிது. எண்ணிய காரியங்கள் இனிதே நிறைவேறும். இல்லத்தில் விருந்தினர்கள் வருகை உண்டு. சுபச் செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாளிது. சிந்திக்கும் திறன் மேலோங்கும். நீண்ட தூரப் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உற்சாகம் பெருகும். தரகுத் தொழிலில் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் சீராக இருக்கும். உடல் அசதி நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு அமையும். குறித்த நேரத்தில் உணவு, ஆழ்ந்த உறக்கம் என நாள் இனிதே கழியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிரிகள் தானாகவே அகல்வார்கள். இறை அருளுக்கு நன்றி செலுத்துங்கள்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி நிலவும். நிதிப் பற்றாக்குறை இருக்காது. கடமையில் சிறிதும் தவறாமல் செயல்படுவீர்கள். குறித்த நேரத்தில், குறித்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீரடையும். சுபச் செலவுகள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். இல்லத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகை உண்டு. சிலருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனச்சிதறல் ஏற்படலாம். கடமையில் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று யோகமிக்க நாளாக அமையவிருக்கிறது. எதிர்பாராத நற்பலன்கள் இல்லம் தேடி வரும். அதிர்ஷ்டக் காற்று வீசும். குடும்பப் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் கைகூடும். இந்த நல்ல நாளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமும் நிதானமும் மேலோங்கும் நாளிது. மன அமைதி பெருகும். முன்கோபம் தணியும். பல நற்காரியங்களை எளிதாகச் சாதிப்பீர்கள். புது நண்பர்களின் சகவாசம் கிட்டும். பிரிந்திருந்த கணவன்-மனைவி உறவு ஒன்று சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கடன்கள் வசூலாகும். நிதிப் பற்றாக்குறை நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இரவில் ஆழ்ந்த உறக்கம் கைகூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் அவசியம். உங்கள் பேச்சிற்கு சபை அங்கீகாரம் குறைவாக இருக்கும். அளவாகப் பேசுங்கள். தேவையற்ற இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவும். நிதி நிலைமை சீரடையும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளையும், அனாவசியச் செலவுகளையும் குறைத்துக் கொள்வது நலம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online