நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 02 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 02 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினரே, இன்று நீங்கள் மிகுந்த விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இன்றைய பணிகளை நாளைக்கு எனத் தள்ளிப் போடுவதைத் தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம். உடல்நலம் தொடர்பான எவ்வித பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியம் கூடாது.

ரிஷபம்

ரிஷப ராசியினரே, இன்று லாப நஷ்டக் கணக்கைப் பார்த்துக்கொண்டே காரியங்களை ஆற்றுவீர்கள். ஆதாயம் இல்லாத எந்த செயலையும் கையில் எடுக்க மாட்டீர்கள். இந்நாள் சற்றே சுயநலம் நிறைந்ததாகத் தோன்றலாம். உங்களின் சூழ்நிலையே அவ்வாறு அமையும் என்பதால் குறை கூற இயலாது. இறைவழிபாட்டில் ஈடுபட்டு, இயலாதவர்களுக்கு உதவுவதன் மூலம் நன்மைகள் பல பெருகும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினரே, இன்று சிந்தனை மேலோங்கி, உங்கள் கடமைகளைச் செய்ய விடாமல் தடுக்கும். தேவையற்ற எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மை பயக்கும். வீண் வம்பு வழக்குகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.

கடகம்

கடக ராசியினரே, இன்று வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு உழைப்பும், அதன் அலைச்சலும் மிகுந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கடும் வெயில் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிருங்கள். உடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினரே, இன்று பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும்; பகைவர்களும் நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும். நிதிநிலை சீராக இருக்கும். கட்டுமானத் தொழில் சிறப்பான லாபத்தை ஈட்டித் தரும்.

கன்னி

கன்னி ராசியினரே, இன்று பேராசையைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களின் வாழ்க்கை நிலையைப் பார்த்து ஆசைப்படுவது கூடாது. பேராசை பெரும் இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானம் தேவை. மனதை ஒருநிலைப்படுத்தி, காலையில் இறைவழிபாடு மற்றும் தியானம் செய்வது சிறப்பான நன்மைகளைத் தரும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினரே, இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் உள்ள பணிகளை இன்று கையில் எடுங்கள். எவ்வித சிரமமுமின்றி காரிய வெற்றி கிட்டும். நீண்ட தூரப் பயணங்கள் நல்லவிதமாக அமையும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையான அளவு நீர் அருந்துவது அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே, இன்று வேகத்தை விட விவேகமே மேலோங்கி நிற்கும். உங்கள் காரியங்களில் மிகுந்த குறியாக இருப்பீர்கள். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும் நாள். வசீகரத் தோற்றம் உண்டாகும். காதல் கைகூடி திருமணம் வரை செல்லும் வாய்ப்புள்ளது. சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு

தனுசு ராசியினரே, இன்று இரட்டிப்பு சந்தோஷத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்டகாலமாகப் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். தலைகுனிந்து நின்ற இடங்களில் தலைநிமிர்ந்து நடக்க ஒரு நல்ல வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுப்பான்.

மகரம்

மகர ராசியினரே, இன்று சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் அதிக எதிர்பார்ப்புகளை வைக்காதீர்கள். கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்க்காமல் இருந்தால் இந்நாள் இனிய நாளாக அமையும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். தேவையற்ற விவாதங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.

கும்பம்

கும்ப ராசியினரே, இன்று நீங்கள் சாதனை படைக்கும் நாள். வெற்றி அடையும் நாள். உங்களுக்கான நன்மைகள் வெளிப்படக்கூடிய நாள் இது. பலவிதமான சோதனைகளைக் கடந்து வந்து, இந்த சிறப்பான நாளை நீங்கள் பெறப்போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்; சந்தோஷம் பன்மடங்காகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முதலிடம் கிடைக்கும். இந்நாளைக் கொண்டாடுங்கள்!

மீனம்

மீன ராசியினரே, இன்று நட்பு ரீதியாகப் பல நன்மைகள் உண்டாகும். புதிய மனிதர்களின் அறிமுகம், புதிய அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். சற்று உடல் அசதியும் உண்டாகும். கடும் வெயில் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். நிறைய நீர் அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online