மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் சிந்தனைகளில் புதுமைப் பொலிவு மிளிரும். கற்பனை வளம் பெருகி, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள். உங்களின் தனித்திறமைகள் வெளிப்பட்டு, சமூகத்தில் நற்பெயரையும் பாராட்டுகளையும் ஈட்டித் தரும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கி, இறைவனின் பரிபூரண ஆசியால் மனம் அமைதி பெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமும் வளமும் நிறைந்த நாளாக அமையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள் தெளிந்து, சந்தேகங்கள் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்று வெற்றி வாகை சூடும் திருநாளாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் நீண்டகாலக் கனவுகள் நனவாக, இந்நாளின் ஒவ்வொரு கணத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்று உங்கள் மனதில் அன்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகள் மேலோங்கி வெளிப்படும். மனதில் நிறைந்திருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மனதிற்கு உகந்தவர்களுடன் உரையாடி நேரத்தைச் செலவிடுவீர்கள். பழைய இனிய நினைவுகள் உங்களை மகிழ்விக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமூகமான போக்கு நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத உதவிகள் தேடி வரும். எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கசப்பான அனுபவங்கள் உங்களை விட்டு அகன்று இனிமை கூடும். இறைவனின் பரிபூரண அருளைப் பெறும் நாளாக இது அமையும். கடன் சுமை குறையும். இரவில் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்று போட்டி, பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். எச்செயலையும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து, சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, வரவிருக்கும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று மனதில் டென்ஷன் சற்று அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். முன்கோபம் அதிகமாக வெளிப்பட்டு, சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்புகள் உருவாகலாம். கவனமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். தினசரி பணிகளைத் துவங்குவதற்கு முன் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்து, இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். நிச்சயமாக நன்மைகளே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்று மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமான பணிகளை மறந்துவிட்டு, தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடமைகளை தவறாமல் நிறைவேற்றுங்கள். கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிருங்கள். முக்கியப் பணிகளை ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொண்டு, குறித்த நேரத்தில் முடிப்பது சிறப்பு.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை எளிதில் கற்றுத் தேர்ந்திடுவீர்கள். வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டம் லாபமாக மாறும். சுபயோகங்கள் நிறைந்த நாள் இது.
மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்று நீங்கள் சோர்வாக உணரலாம். உங்களின் உடல் மற்றும் மனதிற்கான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக வேலைப் பளுவை ஏற்றிக் கொள்ள வேண்டாம். போதிய அளவு தண்ணீர் அருந்தி, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இயன்றவரை நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக அமையும். இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களுக்கான உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இயன்றவரை செலவுகளைக் குறைத்துக் கொள்வது சிறந்தது.
மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்று உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து உயரும் நன்னாளாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவீர்கள். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்கும். இயன்றவரை வீண் விரயச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


