மேஷம்
மேஷ ராசி அன்பர்களே! இன்று உங்கள் சிந்தனையில் சலனம் ஏற்படக்கூடும். எக்காரியத்திலும் தெளிவான முடிவு எட்ட இயலாது என்பதால், கவனத்துடன் சிந்தித்தே முடிவெடுப்பது உத்தமம். அனுபவம் மிக்கோரின் ஆலோசனை கேட்பது நலம் பயக்கும். புதிய முயற்சிகளை இயன்றவரை ஒத்திப்போடுவது சிறந்தது. தெய்வ வழிபாட்டில் மனம் செலுத்துவது நன்மைகளை ஈட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே! இன்று பிறருக்கு உதவும் மனப்பாங்கு மேலோங்கும். தேவையான தனவரவு கிட்டும். இல்லத்திற்குத் தேவையான பொன், பொருட் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். பயணங்களால் ஆதாயம் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே! இன்று போதுமான ஓய்வு பெறுதல் அவசியமாகும். அளவுக்கு அதிகமான பணிச்சுமையை ஏற்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், சத்தான உணவுமுறையைப் பின்பற்றுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே! இன்று மனதில் சிறு கவலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிந்தனையில் குழப்பம் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று தொய்வு காணப்படும். எனினும், மனம் தளராமல் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். நற்பலன்கள் நிச்சயம் உண்டாகும். காலத்தை வீணடிக்காமல் பயனுறச் செயல்படுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே! இன்று மகிழ்ச்சிக்கு அளவின்றி அமையும். எதிர்பார்த்த நன்மைகளும், எதிர்பாராத யோகங்களும் உங்களைத் தேடி வரும். வேலை தேடுவோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு கைகூடும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே! இன்று துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் தைரியம் வெளிப்படும். மனதில் தேக்கி வைத்திருந்த கருத்துக்களை வெளிப்படுத்தி, நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நற்பலன்கள் கூடும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே! இன்று மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். மனதில் சிறு கலக்கம் ஏற்படக்கூடும். பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்; சோர்வடைய வேண்டாம். தெய்வ வழிபாட்டில் மனம் செலுத்துவது நல்வழியைக் காட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே! இன்று லாபம் பெருகும் நாளாக அமையும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யலாம். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இல்லத்தரசிகளுக்கு ஆன்மிக ஈடுபாடு மனநிறைவைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே! இன்று நற்செயல்கள் கைகூடும். இல்லத்தில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும். சுபச் செலவுகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யலாம். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே! இன்று மனதில் ஒருவிதப் பதற்றம் ஏற்படலாம். முன்கோபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களுடன் பழகும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூட சற்றே அச்சம் காணப்படலாம். மிகுந்த கவனத்துடன் செயல்படுவது உத்தமம். கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய இடத்தையும், கட்டுப்படுத்த வேண்டிய இடத்தையும் அறிந்து செயல்படுங்கள்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே! இன்று நன்மைகள் பல உண்டாகும். உங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரிந்திருந்த உறவுகளைச் சந்திக்க வாய்ப்பு கிட்டும். மன நிம்மதி கிட்டும் நாளாக அமையும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே! இன்று நலம் பொலியும் நாளாக அமையும். ஆரோக்கியக் குறைபாடுகள் விலகி நலம் மேம்படும். நீண்டதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமையில் சற்று சுணக்கம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். நற்பலன்கள் கிட்டும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


