மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று மனநிறைவு கூடும். தொழிலிலும் வியாபாரத்திலும் திருப்திகரமான நிலை அமையும். வாழ்வினில் முன்னேற்றம் காணும் நம்பிக்கை துளிர்விடும். தடைப்பட்ட காரியங்கள் யாவும் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் ஆனந்தம் இரட்டிப்பாகும். இரவில் நிம்மதியான உறக்கம் கிட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறம்படச் செயல்படுவீர்கள். தேவையான தனவரவு கைகூடும். நீண்டதூரப் பயணங்கள் சிறப்பாய் அமையும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். அனாவசியச் செலவுகள் கட்டுக்குள் வரும். சுபச் செலவுகள் உண்டாகும். இல்லத்து மங்கையர்க்கு இறை வழிபாட்டில் மனத்திருப்தி கிட்டும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று சாந்தமானதொரு நாளாக அமையும். தங்களது பணிகள் யாவும் சீராக நடைபெறும். நிதி நிலைமை சீரடையும். கடன் சுமை தணியும். தாங்கள் செல்லும் இடமெல்லாம் மரியாதையும் அங்கீகாரமும் கிட்டும். மாணவர்களுக்குக் கல்வியில் நிலவிய தடைகள் நீங்கும். மங்கையர்க்குப் பொன், பொருள் சேர்க்கை உண்டு.
கடகம்
கடக ராசியினருக்கு இன்று சற்று மனக்குழப்பம் ஏற்படக்கூடும். தொழிலிலும் வியாபாரத்திலும் சிறு பின்னடைவுகள் தோன்றலாம். அதற்காகக் கவலைகொள்ள வேண்டாம். காலத்தை வீணடிக்காது தங்களது கடமைகளைச் சரிவர முடித்துவிட்டால் போதுமானது. எழும் சிக்கல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அனாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பது நலம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று சிறு மனபயம் உண்டாகலாம். அலைச்சல் அதிகரிக்கக்கூடும். பணிச்சுமை மிகுந்திருக்கும். இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் விசேஷ கவனம் செலுத்துங்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று சவால் நிறைந்த நாளாக அமையக்கூடும். அனாவசிய எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். எதிரிகளின் தொல்லைகள் ஏற்படலாம். நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். அவசரமான முடிவுகளைத் தவிர்ப்பது உத்தமம். பொறுமையும் நிதானமும் அவசியம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கைகூடும். தேவையான தனவரவு கிட்டும். தொழிலிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் அகலும். இடமாற்றம், ஊதிய உயர்வு எதிர்பார்த்தவர்களுக்குச் சாதகமான செய்தி உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்று குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். வாழ்விற்குத் தேவையான தெளிவான, உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையான தனவரவு இருக்கும். வம்பு வழக்குகளிலிருந்து விடுதலை கிட்டும்.
தனுசு
தனுசு ராசியினர் இன்று புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். விநாயகர் வழிபாட்டுடன் தங்களது முயற்சிகளைத் தொடங்குங்கள். நிச்சயமாக காரியத் தடைகள் நீங்கும். வியாபார விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கும் நற்செய்தி காத்திருக்கிறது.
மகரம்
மகர ராசியினருக்கு இன்று சற்று தொல்லைகள் நிறைந்த நாளாக அமையக்கூடும். தொழிலும் வியாபாரமும் மந்தமாக இருக்கும். உடல் அசதி ஏற்படலாம். இல்லத்தில் கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருத்தல் அவசியம். முன்கோபத்தைத் தவிருங்கள். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நலம். இறைவழிபாட்டில் ஈடுபட்டு, தேவையான ஓய்வை மேற்கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று நற்பலன்கள் கிட்டும். தேவையான தனவரவு கைகூடும். அனாவசியச் சந்தேகங்கள் அகலும். நிதானத்துடன் சிந்தித்து, பக்குவமாக நடந்து கொள்வீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கணவன்-மனைவிக்கிடையே நிலவிய சிக்கல்கள் தீரும். கடன் தொல்லை தணியும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று பொறுமையும் நிதானமும் நிறைந்த நாளாக அமையும். தங்களது கடமைகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


