மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் அமைதி குடிகொள்ளும். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறுகள் அகலும். பணப் பற்றாக்குறை நீங்கி, பொருளாதாரம் மேம்படும். தேவையற்ற அலைச்சல்கள் குறையும். கல்வித் துறையில் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய உறவுகளும், நட்புகளும் மலரும் நன்னாள் இது. பல நல் அனுபவங்கள் வாய்க்கும். பலரின் நல்லாதரவையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வர்த்தகத்தில் சுறுசுறுப்புடன் செயலாற்றுவீர்கள். அவப்பெயர்கள் நீங்கி, நற்பெயர் நிலைக்கும். இரவு இனிமையான உறக்கமும் கைகூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் மேலோங்கும். பிறருக்கு உதவி செய்யும் நல்வாய்ப்பு அமையும். பகைவரும் நண்பராக மாறும் பக்குவம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழல் நிலவும். கணவன்-மனைவி அன்னியோன்னியம் பெருகும். சுபச் செலவுகள் தோன்றும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதியவற்றைக் கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். எளிதில் புதிய விஷயங்களை உள்வாங்கிக் கொள்வீர்கள். தேவைக்கேற்ப பண வரவு தாராளமாக இருக்கும். சிறு சிறு ஆசைகள் நிறைவேறும். வாகனங்கள் வாங்க உகந்த நன்னாள் இது. நற்பலன்கள் கிட்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராகி, செல்வ வளம் பெருகும். பணப் பற்றாக்குறை நீங்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிணக்குகள் அகலும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். தொழில், வர்த்தகத்தில் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்ந்து, மனநிறைவு உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். செயல்களில் ஆர்வம் கூடும். பயணங்கள் சுபமாக அமையும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். தொழில் மற்றும் வர்த்தகத்தில் தகுந்த அங்கீகாரம் பெறுவீர்கள். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்று சிறந்த நாளாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனோதிடம் அவசியம். எதிர்பாராத ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் பக்குவம் தேவை. பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாது, துவண்டுபோகாமல் இருத்தல் நலம். இறைவழிபாடு மன அமைதி தரும். அன்றாடப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது உத்தமம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போராட்ட குணம் அவசியம். சோர்வடையாது, தைரியத்துடன் நிலைத்து நிற்க வேண்டும். எல்லா இடங்களிலும் மெளனம் சாதிப்பது தகாதது. மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச வேண்டிய சூழல் ஏற்படும். நீதியை நிலைநாட்ட குரல் கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் இன்றைய நாளை வெற்றிகரமாகக் கடக்க முடியும். எச்சரிக்கையுடன் செயல்படவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயரும் புகழும் உயரும். தொழில் மற்றும் வர்த்தகத்தில் விரும்பிய இலக்குகளை அடைவீர்கள். மனக் கவலைகள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பெண்களுக்குப் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கலைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்நாள் இனிமையானதாக அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நலம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருங்கள். புதிய நபர்களை முழுமையாக நம்ப வேண்டாம். அறிமுகமில்லாத பணிகளில் ஈடுபடாதீர்கள். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்த்து, தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது சிறந்தது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவு பொங்கும். இறைவழிபாடு மன அமைதியை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். பயணங்கள் வெற்றிகரமாக அமையும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. வீண் விரயச் செலவுகளைத் தவிர்ப்பது நலம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான சூழல் நிலவும். தமது கடமைகளிலிருந்து தவறாமல் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவிய இறுக்கம் தணியும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். நிதி நிலைமை சீராகும். கணவன்-மனைவி உறவு பலப்படும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


