மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று நற்பலன்கள் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் ஆனந்தமாகப் பொழுதைக் கழித்து மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகளும், கனவுகளும் ஈடேறும். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமையும், அன்பும் மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரம் சீராக நடைபெறும். சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் சிறு மனக்கலக்கம் தோன்றலாம். புதிய முயற்சிகளைத் தொடங்குவதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும். கணவன்-மனைவிக்கிடையே சிறு சச்சரவுகள் உண்டாக வாய்ப்பு உண்டு. எனவே, மிகவும் நிதானத்துடனும், சிந்தித்தும் செயல்பட வேண்டிய நாள் இது. இறை வழிபாட்டில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். நிச்சயம் நன்மை உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசியினர் இன்று அவசரக் காரியங்களை மேற்கொள்ள வேண்டாம். நிதானத்துடனும், பொறுமையுடனும் சிந்தித்துச் செயல்படுவது அவசியம். முன்கோபத்தை அறவே தவிர்க்கவும். எதிரிகளைக் கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அனாவசிய விரயங்களைக் குறைத்துக் கொள்வது உத்தமம்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நன்மைகள் பெருகும் நாளாக இருக்கும். உங்கள் பணிகளை முனைப்புடன் செயலாற்றி வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகளிடத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு மேம்படும். மகிழ்ச்சி இரு மடங்காகப் பெருகும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாளாக அமையும். திறம்படச் சிந்தித்து, புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். மனச்சுமை நீங்கி லேசாவீர்கள். சொந்த பந்தங்களுடன் இணைந்து நேரத்தைச் செலவிட நல்லதொரு வாய்ப்புக் கிடைக்கும். சுப விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. கோடை வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று சீரான நலன் பெருகும் நாளாகும். ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் சரியாகும். வீண் விரயங்கள் கட்டுக்குள் வரும். வருவாய்ப் பெருக்கம் உண்டாகும். சேமிப்பை உயர்த்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வித் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி இரு மடங்காகப் பெருகும் நாள் இன்று.
துலாம்
துலாம் ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று மன அமைதி நிறைந்த நாளாகும். உங்கள் கடமைகளை செவ்வனே செய்து, இந்த நாளை அமைதியாகக் கடந்து செல்வீர்கள். பகைமறந்து உறவுகள் புதுப்பிக்கப்படும். இல்லத்தில் உற்றார் உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சுப விரயங்கள் ஏற்படும். இறை வழிபாடு மனதிற்குப் பேரமைதியைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகப் பரிமளிக்கும். எதிர்பாராத நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாது பயன்படுத்திக் கொள்ளவும். கணவன்-மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணையும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆனந்தம் பொங்கும் நாளாகும். தாழ்வுற்ற இடங்களில் உயர்வும், மதிப்பும் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சுயமரியாதையும், பெருமையும் உண்டாகும். சமூகத்தில் உன்னத இடத்தைப் பெறுவீர்கள். அளவற்ற மகிழ்ச்சிக்கு இடமுண்டு. சாதனைப் படைக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும் நாளாக இது அமையும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று மன அமைதி நிலவும் நாளாகும். சவால்களும், குழப்பங்களும் இருந்தாலும், மன அமைதியுடன் அவற்றை அணுகுவீர்கள். எது நடந்தாலும், பக்குவத்துடன் ஏற்றுக் கொள்ளும் மனோதிடம் மேலோங்கும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். காலையில் பத்து நிமிடங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் மேற்கொள்வது கூடுதல் சுப பலன்களை அளிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருவாய் பெருகும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சொந்த பந்தங்களுடன் இணைந்து இருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் வெற்றிகரமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நலம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று அளவுக்கு மிஞ்சிய பேச்சு, முன்கோபம் இரண்டையும் தவிர்க்கவும். பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும் சூழ்நிலை உண்டாகலாம். எனவே, சிந்தித்து, கூர்மையான சிந்தனையுடன் தந்திரமாகச் செயல்படுவது உத்தமம். ஆர்ப்பாட்டமான செயல்களைத் தவிர்க்கவும். அமைதி காப்பதன் மூலமே பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பதை உணர்வது நல்லது.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


