நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 07 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 07 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று தனவரவு சிறக்கும். லாபம் கொழிக்கும் இந்நாளை நற்பயன் கொள்ளுமாறு பயன்படுத்திக்கொள்ளவும். புதிய முதலீடுகளை மேற்கொள்வது உத்தமம். புதிய தொழில் முயற்சிகளும், வேலை தேடுதலும் நற்பலன் தரும். விநாயகப் பெருமானை வழிபட்டு உங்கள் முயற்சிகளை மேற்கொள்ள காரிய சித்திகள் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பேருற்சாகம் பொங்கும் நாளாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேகம், விவேகம் மேலோங்கும். வருவாய் சிறந்து விளங்கும் வேளையில் சேமிப்பு நலன் பயக்கும். அனாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். நீண்ட தூரப் பயணங்கள் சுபமாக அமையும். பொன், பொருள் சேர்க்கைக்கு உகந்த தினம்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலன்கள் பெருகும் உன்னத தினமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் சீராகும். ஈகைச் சிந்தனையால் பிறருக்கு உதவிடுவீர்கள். மன அமைதி நிறையும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். மாணவர்களுக்குக் கல்வித் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்று வெற்றி வாகை சூடும் உன்னத நாள். தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்பும் ஆற்றலும் வெளிப்படும். முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும். உடல்நலக் குறைபாடுகள் அகலும். உங்கள் சுறுசுறுப்பு முன்னேற்றப் பாதைக்கு வித்திடும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நாளாகும். வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் முழு வெற்றி பெறும். எதிர்ப்புகள் விலகி, எதிரிகளின் தொல்லைகள் அகலும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் தென்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிய உத்வேகத்துடன் செயல்படும் நாளாக அமையும். புதிய விஷயங்களை விரைவாகக் கற்றுத் தெளிவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்காலத்திற்கான சிறப்பான முடிவுகளை எடுத்து, சாதனை படைக்க உகந்த நாள் இது.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். மனதில் ஒருவிதக் குழப்பம் நீடிக்கும். தெளிவான முடிவுகளை மேற்கொள்வதில் சற்றுத் தடுமாற்றம் ஏற்படலாம். சிந்தித்துச் செயலாற்றுவது அவசியம். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். புதிய முயற்சிகளைத் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சி பொங்கும் நாளாகும். மனதிற்கு உகந்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். காதல் கைகூடி, திருமண பந்தத்தில் இணைய வழிவகுக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சுமுகமாக நடைபெறும். மன அமைதி நிறைந்த நாள் இது.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று சிறுசிறு எதிர்ப்புகள் உருவாகக்கூடும். கோபம் மேலோங்க வாய்ப்புள்ளது. காரியங்களில் கவனம் சிதறலாம். நிதி நெருக்கடி உண்டாக வாய்ப்புள்ளது. கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்திவைப்பது நல்லது. சோம்பலைத் தவிர்க்கவும். இறைவழிபாடு மேற்கொள்வது நற்பலன் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனைப் பெருக்கு அதிகரிக்கும். தேவையற்ற எண்ணங்களால் கடமைகளில் தொய்வு ஏற்படலாம். கவனமுடன் செயல்பட வேண்டும். முக்கியப் பொறுப்புகளை கையாளும்போது அலட்சியத்தைத் தவிர்க்கவும். அறிமுகமில்லாத நபர்களை முழுமையாக நம்புவது கூடாது. நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று நிகழ்காரியங்களில் மேன்மையுடன் செயல்படுவீர்கள். நிதானமும், பக்குவமும் மேலோங்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவி வந்த சிக்கல்கள் அகலும். மன நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பன்மடங்கு பெருகும்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று சற்று அலைச்சல் நிறைந்த நாளாக அமையும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு ஏற்படக்கூடும். நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online