நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 08 ஜூன் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 08 ஜூன் 2026 nithyasubam



Rewrite the following article professionally in pure Tamil. Act as an expert Tamil astrologer and copywriter. DO NOT include any conversational filler, intro, or outro text like “Here is the rewritten content”. Output ONLY the final rewritten Tamil article in clean HTML format:

– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அனாவசியமாக மூன்றாவது நபரிடம் சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். விட்டுக் கொடுத்தால் நல்லதே நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். லாப நஷ்ட கணக்கு பார்த்து செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனத்தோடு செயல்பட வேண்டும். தேவையில்லாத சிந்தனைகளை ஒதுக்கி வைப்பது நல்லது. மூன்றாவது நபர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை கடமைகளை அடுத்தவர்கள் கையில் நம்பி ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான பொருட்களை கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று இந்த நாள் வேகமாக ஓடிவிடும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுவிட்டு, கடமையை செய்யுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்வது, எதிர்காலத்திற்கு நல்லது.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தக்க சமயத்தில் தக்க உதவி கிடைக்கும். நண்பர்கள் உறவுகளுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள இந்த நாள் உதவி செய்யும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று அளவோடு ஆசைப்பட வேண்டும். பேராசை பெரு நஷ்டத்தை உண்டு பண்ணிவிடும். அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய வாழ்க்கையை வாழாதீர்கள். உங்களுடைய திறமை, உங்களுடைய சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டு வாழ்வது சிறப்பான பலனைத் தரும். ஆடம்பரத்தை குறைத்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பயணங்களை தவிர்க்க முடியாது என்றால் பயணத்தின் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று காரிய வெற்றி கிடைக்கும். வேகத்தோடு சேர்த்து விவேகமாக செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உயர் பதவிகள் கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. சாதனை படைக்கக்கூடிய இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவை ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்காதீங்க. டிஸ்கவுண்ட் சேல் என்று நம்பி நிறைய பணம் கொடுத்து பொருட்களை வாங்காதீர்கள் உஷாரா இருந்துக்கோங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி காண்பீர்கள். சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி தரும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க நல்ல நேரம் கைகூடி வரும். சொத்து பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் இல்லாமல் வேலை செய்வது நல்லது. தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் இருக்கட்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online