நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 10 ஏப்ரல் 2026 nithyasubam.in

இன்றைய ராசிபலன் – 10 ஏப்ரல் 2026 nithyasubam.in


– Advertisement –

மேஷம்

சுப யோகங்கள் நிறைந்த நாளாக மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் அமையும். குடும்பத்தில் மங்கல காரியங்களுக்கான தொடக்கங்களை மேற்கொள்ளலாம். புதிய தொழில் முயற்சிகள், உத்தியோக மாற்றங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நற்பலன்கள் கிட்டும். இல்லத்தரசிகள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல் நலம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, இன்று உங்கள் செயல்களில் தைரியமும், துணிச்சலும் வெளிப்படும். மனதில் உள்ளவற்றை ஒளிவுமறைவின்றி எடுத்துரைப்பீர்கள். நீண்டகாலமாக இருந்த மனபாரம் நீங்கி, அமைதி குடிகொள்ளும். மறைமுக எதிரிகள் விலகிடுவர். உறவினர்களுக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து, குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். இரவுப் பொழுதில் ஆழ்ந்த உறக்கம் கைகூடும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, இன்றைய நாள் லாபகரமானதாக அமையும். உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். விவசாயத் துறையினருக்கு இன்று சிறந்த வளர்ச்சி நாளாக அமையும். எதிர்கால சேமிப்புகளுக்கான முயற்சிகளைத் துவங்கலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் பிற்காலத்தில் பெரும் லாபத்தைத் தேடித் தரும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, எதிர்பாராத தனவரவு இன்று உங்களை வந்தடையும். ஏதேனும் ஒரு வகையில் பரிசுகள் கிடைத்து மனமகிழ்ச்சி பெருகும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இல்லத்தரசிகளுக்கு இன்றைய நாள் மனநிறைவையும், சந்தோஷத்தையும் வழங்கும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, இன்றைய நாள் நீங்கள் வெற்றி வாகை சூடும் நாளாக அமையும். சிந்தனையில் தெளிவும், பேச்சில் அசாத்திய திறமையும் வெளிப்படும். உங்கள் வசீகரத் தோற்றம் அனைவரையும் கவரும். புதிய உத்தியோகம் தேடுவோருக்கு நல்வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குச் சாதகமான முடிவுகள் கிட்டும். இறை நம்பிக்கை மேலோங்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, இன்றைய நாள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாகும். சிறுசிறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள மன தைரியம் அவசியம். மனம் துவளவோ, அவசரப்பட்டு முடிவெடுக்கவோ கூடாது. இறைவழிபாட்டில் ஈடுபட்டு, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, இன்றைய தினம் உடல் சோர்வும், அசதியும் ஏற்படக்கூடும். பணிகள் குவிந்திருந்தாலும், அவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது. போதுமான அளவு நீர் அருந்தி, உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தேவையற்ற விரயச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே நிதானத்துடன் செயல்படவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, இன்றைய நாள் உங்களுக்கு நற்பலன்கள் நிறைந்த நாளாகும். பொருளாதார நிலை சீராக இருக்கும்; தேவையறிந்து தனவரவு அமையும். உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் சீரான முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் மேலோங்கும். நீண்ட தூரப் பயணங்கள் இனிதே நிறைவேறும். வெளிப்புறச் சுற்றுப்பயணங்களின்போது, தேவையான அளவு நீர் அருந்தி, வெயில் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, இன்றைய நாள் நீங்கள் சாதனைகள் படைக்கும் நாளாக அமையும். நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். பகைமை பாராட்டியவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழல் உருவாகும். கடன் சுமை குறையும். தனவரவு பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் கிட்டும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, இன்றைய நாள் உங்களுக்கு நலன் நிறைந்ததாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, பிணிகள் நீங்கும். உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் நிலவிய தடங்கல்கள் அகலும். வியாபாரத்தை விரிவாக்குவதற்கான வாய்ப்புகளையும், புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளலாம். நற்பலன்கள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, இன்றைய தினம் அமைதியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். பிறரை நம்பி ஏமாறாத மனோபாவத்துடன் உங்கள் அணுகுமுறை அமையும். புதிய அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அமைதியான போக்கைக் கடைப்பிடித்தாலும், மறைந்திருக்கும் திறமைகளும், தந்திரங்களும் வெளிப்படும் நாளாக இது அமையும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, இன்றைய தினம் சற்று அலைச்சலுடன் காணப்படும். இருப்பினும், உங்கள் பணிகளைச் சீராக நிறைவேற்றி முடிப்பீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க, போதுமான அளவு நீர் அருந்துங்கள். வெயில் நேரங்களில் வெளிப்புறங்களில் சுற்றுவதைத் தவிர்த்து, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இயன்றவரை ஆரோக்கியமான உணவை மட்டுமே உட்கொள்வது உத்தமம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online