மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உளக் கலக்கமும், அமைதியின்மையும் ஏற்படக்கூடும். புதிய தீர்மானங்களை இன்றைக்குத் தவிர்ப்பது உத்தமம். நாளாந்தக் கடமைகளில் கூடுதல் கவனம் தேவை. அறிமுகமில்லாதவர்களுடன் பழகும்போது எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் கல்வியில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி நிலவும். தேவையான ஓய்வு கிட்டும். பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இழந்த மன நிம்மதி மீண்டும் வந்து சேரும். குடும்ப உறவுகளில் நல்லுறவு நீடிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையக்கூடிய நன்னாள் இது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று அதிக அலைச்சலின்றி காரியங்களைச் செய்வது சிறப்பு. உடல் சோர்வு ஏற்படக்கூடும். போதிய ஓய்வு பெறுவது அவசியமாகும். மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை மற்றும் வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையைக் கடைபிடிப்பது இன்றியமையாதது. முன்கோபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோபத்தில் கடுமையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். எத்தகைய பெரும் பிரச்சனையாக இருப்பினும், மௌனமே சிறந்த பதிலாக அமையும். பிரச்சனைகளை பேச்சால் பெரிதாக்க வேண்டாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபட மன அமைதி கிட்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் பெருகும் நன்னாளாக அமையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். புதியவர்களின் அறிமுகம் புது அனுபவங்களைத் தரும். நிதி நிலைமை சீராகக் காணப்படும். தேவையான நிதி கைகூடும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும் சுபநாளாக அமையும். வசூலாகாத கடன்கள் வசூலாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர். பிள்ளைகளின் உயர் கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மங்களகரமான பலன்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமை மனதிற்கு இன்பம் சேர்க்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவீர்கள். புதிய பகைவர்கள் உருவாக வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபார விஷயங்களில் அநாவசியமாகப் பேசி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டும் வாய்ப்புள்ளது. மனதிற்கினிய நபரை சந்திக்கும் வாய்ப்பு அமையும். மனதிற்கினியவருடன் திருமணப் பேச்சுக்கள் கைகூடலாம். தொழில், வியாபாரம் போன்ற துறைகளில் எதிர்பாராத நன்மைகள் நிகழலாம். இத்தகைய சுபபலன்களை அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பம் நிறைந்த நாளாக அமையலாம். பிறரிடம் உதவி கோரும் சூழல் ஏற்படலாம். எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டு மன நிம்மதியைக் குறைக்கலாம். கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்யுங்கள்; நற்காரியங்கள் நிச்சயம் நிகழும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்பு மேலோங்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். நீண்ட தூரப் பயணங்களால் நற்பலன் கிட்டும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்தி நிலை உண்டாகும். மனசாட்சிக்கு விரோதமான எந்த செயலையும் செய்ய மாட்டீர்கள். நேர்மையான வழியில் செயல்படுவீர்கள். இதனால் புதிய பகைவர்கள் உருவாகக்கூடும். இருப்பினும், சமூகத்தில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், கௌரவம் உயரும். தேவையான ஓய்வு கிட்டும். உணவு, உறக்கம் சிறப்பாக அமைந்து நாள் இனிமையாக அமையும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். சுபச் செலவுகள் உண்டாகும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


