மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைந்த நன்னாள். நவ முயற்சிகள் கைகூடி வெற்றி தரும். நெடுநாள் விருப்பங்கள் ஈடேறும். தெய்வ பக்தி மேலோங்கும். குடும்பத்தில் சௌஜன்யம் பெருகும். கணவன்-மனைவிக்கிடையே அன்யோன்யம் சிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்கள் இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் திறன்கள் வெளிப்பட்டுப் பாராட்டுகளைப் பெறும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். நெடுந்தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்கள் இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆக்கப்பூர்வமான பல செயல்களில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியாதாரங்கள் கைகூடும். நிதி நிலைமை சீரமைக்கப்படும். கடன் சுமை கணிசமாகக் குறையும். பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு அவசியமாகும். ஆரோக்கியத்தில் விசேஷ கவனம் செலுத்துவது உசிதம்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நல்வழியில் அமையும் நாளாகும். உடல்நலம் மேம்படும். கடமைகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உறவினர்களுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் அகலும். மகிழ்ச்சி இருமடங்காகும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று முன்கோபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். இறைவழிபாட்டின் மூலம் மனதை அமைதியுடன் வைத்துக்கொள்வது நன்று. தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமை அவசியம்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்று போதுமான ஓய்வு எடுப்பது நல்லது. நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்ப்பது சிறந்தது. அதிக வேலைப்பளு இருப்பின், அதனை ஒத்திவைப்பது நலம். சோர்வின் காரணமாக உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. போதுமான அளவு நீர் அருந்தவும். சுகாதாரமான உணவை உட்கொள்ளவும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று போராடும் மன உறுதி அவசியமாகும். சில தடங்கல்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். முயற்சிகளுக்கு உடனடிப் பலன் கிடைப்பது கடினம். பொறுமை காப்பது நலம். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது உசிதம். பயணங்களை இயன்றவரை குறைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மன உறுதி மிகவும் அவசியமாகும். பிரச்சினைகளைக் கண்டு துவளவோ, துயரங்களுக்குப் பணிவோ கூடாது. எதிர்த்து நிற்கும் மன உறுதி இருப்பின், இந்நாளை சிறப்பாகக் கையாளலாம். குறிப்பாக, பெண்கள் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் செயல்பட வேண்டும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பிரிந்த தம்பதியிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் அகலும். குடும்பத்தில் ஒற்றுமையும், நல்லிணக்கமும் கூடும். சுபச் செலவுகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிட்டும்.
மகரம்
மகர ராசி அன்பர்கள் இன்று இரக்க சிந்தனையுடன் நடந்துகொள்வீர்கள். எதிரிகளுக்கும்கூட மன்னிப்பு வழங்கி, வாய்ப்பளிக்கும் மனப்பான்மை மேலோங்கும். நெடுநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும். சொத்து தொடர்பான சச்சரவுகளுக்கு நல்லதொரு முடிவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் நிலவும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழப்பமான மனநிலை ஏற்பட வாய்ப்புண்டு. எந்த முடிவை எடுப்பது என்பதில் சிறு தடுமாற்றம் உண்டாகும். இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது உசிதம். பேச்சில் நிதானம் தேவை. அநாவசியமான விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.
மீனம்
மீன ராசி அன்பர்கள் இன்று நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். சிறு சிறு சோதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றைக் கடக்க நேர்மையும், உண்மை பேசுதலும் இன்றியமையாதவை. சோதனைகளை நேர்மையுடன் கடந்துவிட்டால், இன்று சாதனைகள் புரியலாம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


