நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 17 ஏப்ரல் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 17 ஏப்ரல் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று சிறப்பான, மனநிறைவான நாளாக அமையும். உடல்நலத்தில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். நிதித் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் நற்பலன்கள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுமுகமும் நிலவும். இருப்பினும், பணவரவு மற்றும் செலவுகள் குறித்த விஷயங்களில் சற்றுக் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று மிகுந்த உற்சாகத்துடன் திகழ்வர். தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றுவர். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புத்துணர்ச்சி நிறைந்த இந்நாளை அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாகும். மனதில் அமைதியும் நிம்மதியும் குடிகொள்ளும். தேவையற்ற சங்கடங்கள் தானாகவே விலகும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும். குறிப்பாக, கட்டுமானத் தொழில் சிறப்பான லாபத்தை ஈட்டித்தரும். பிள்ளைகளால் பெருமை மற்றும் மனமகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும் நாளாகும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிட்டும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடல்நலக் கோளாறுகள் அகலும். நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். உங்கள் பேச்சுத்திறன் இன்று மேலும் மெருகேறும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை, இன்று உறுதியுடனும் திட சங்கற்பத்துடனும் செயல்படுவீர்கள். எக்காரியத்தையும் துணிச்சலுடன் முடித்துக்காட்டுவீர்கள். உங்கள் பேச்சுத்திறன் வெளிப்பட்டு, அனைவரையும் கவரும். எதிரிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். நீண்ட தூரப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். சுபகாரிய நிகழ்வுகள் வாய்க்கப்பெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சற்றே மன அழுத்தம் நிறைந்த நாளாக அமையக்கூடும். முன் கோபம் தலைதூக்க வாய்ப்புள்ளது. உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் காலதாமதம் ஏற்படலாம். காலம் வீணாகக் கழியும் சூழல் உண்டாகும். எனவே, ஒவ்வொரு செயலிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுங்கள். அலைபேசி பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு உகந்த நாளல்ல. தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல், உங்கள் கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது அவசியம். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு, பாசம், காதல் ஆகியவை மேலோங்கும் நாளாகும். நீண்டகாலமாகப் பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணையும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று சற்றே மனப் பயமும் பதட்டமும் இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது அவசியம். கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். மற்றபடி, உங்களுக்குத் தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று ஆதாயமில்லாது எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டீர்கள். லாப நஷ்டக் கணக்கிட்டு மட்டுமே செயல்படுவீர்கள். சுயநல சிந்தனைகள் மேலோங்கலாம். இதனால், நல்ல நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சுயநலத்துடன் பொதுநலமும் கலந்திருக்க வேண்டிய நாள் இன்று.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று பல நற்பலன்கள் கிட்டும். உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் ஆதரவு பெருகும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கிக் கடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் சந்தித்த சங்கடங்களில் இருந்து விடுபடக்கூடிய நாள் இன்று.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக அமையும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உங்கள் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிட்டும். லாபம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online