மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்றைய நாள் சற்றே அலைச்சல் மிகுந்ததாக அமையும். புதிய முயற்சிகளைத் தவிர்த்து, இருக்கும் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் உடல்நலனில் கூடுதல் அக்கறை தேவை. உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு மன அமைதி நிறைந்த நாளாக அமையும். தேவைக்கேற்ப தனவரவு உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தெய்வீக அருள் துணை நின்று நல்வழி காட்டும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நிலவிய மன அழுத்தம் குறையும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்கான உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். வேலை தேடுவோருக்கு நற்செய்தி கிட்டும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு சுப பலன்கள் அதிகம் நிறைந்த நாளாக அமையும். அரிய பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை தேடும் அன்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். விரிவாக்கப் பணிகளிலும் ஈடுபடலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அள்ளித்தரும். சிந்திக்கும் திறன் மேம்படும். பணிகளை சரியான நேரத்தில் முடித்து சிறப்பீர்கள். உங்களின் வாழ்க்கைத்தரம் ஒரு படி உயரும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு மகிழ்ச்சி பெருகும் நாளாக அமையும். அன்பு, பாசம், காதல் உணர்வுகள் மேலோங்கும். கணவன் மனைவிக்குள் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். மனம் விரும்பிய துணைவரைக் கரம் பிடிக்கும் வாய்ப்புகள் உண்டு. வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் இனிதே நடைபெறும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்று மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் செயல்திறன் மேம்படும். உங்களின் தனித்திறமைகள் வெளிப்பட்டு, உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுப விரயங்கள் ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு மனநிறைவு நிறைந்த நாளாக அமையும். உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பப் பெண்களுக்கு நிலவி வந்த மனக் கவலைகள் அகலும். குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவு பெறுவீர்கள். உங்களின் பணிகளை பொறுப்புணர்வோடு செய்து முடிப்பீர்கள். கடமையில் இருந்து வழுவாமல் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்று சற்றே மனக்குழப்பம் ஏற்படக்கூடும். தேவையற்ற சந்தேகங்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. அன்புக்குரியவர்களிடம் அதிக கோபம் கொள்வதைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆதாரமற்ற சந்தேகங்களால் நல்ல விஷயங்களை இழக்க நேரிடலாம், எனவே கவனத்துடன் செயல்படவும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிவாகை சூடும் நாளாக அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். சுப விரயங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் தடைபட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சுமூகமான சூழ்நிலை நிலவும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்று நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் பிறரிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். சோம்பலைத் தவிர்த்து, சுறுசுறுப்புடன் செயல்படவும். இன்றைய பணிகளை நாளைக்கு ஒத்திப்போடுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக மாணவர்கள் இன்று கவனமுடன் கல்வி பயில்வது அவசியம்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு போட்டி பொறாமைகள் சற்று அதிகமாக இருக்கும். தேவையற்ற மன அழுத்தம் ஏற்படக்கூடும். வாக்குவாதங்களால் தகராறுகள் எழ வாய்ப்புள்ளது என்பதால், கூடுமானவரை பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. முன் கோபத்தைத் தவிர்த்து, உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்தவும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்று சிந்திக்கும் திறன் மேலோங்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் மனதில் எழக்கூடும். சிறிய பிரச்சனைகள் கூட மனதை பெரிதும் பாதிக்கும் என்பதால், அமைதியைக் கடைப்பிடிப்பது அவசியம். இறை வழிபாட்டில் ஈடுபட்டு மனத்தெளிவைப் பெறவும். தேவையற்ற சிந்தனைகளையும் கால விரயத்தையும் தவிர்த்து, ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்தினால் நன்மையே நடக்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


