நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரும் நன்னாள். மனதில் ஆனந்தம் பொங்கும். தொழிலிலும் வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றங்கள் கிட்டும். இதுநாள் வரை நீங்கள் எதிர்பார்த்த உன்னத வாழ்வு கைவசமாகும். சுப காரியத் தடைகள் நீங்கும். மனதிற்கினிய துணையை மணந்து இன்புறுவீர்கள். தெய்வ சக்தியைப் போற்றுங்கள்.

ரிஷபம்

முன்கோபத்தால் சிறுசிறு சிரமங்கள் உண்டாகக்கூடும். நல்வாய்ப்புகளை இழக்கவும், உங்கள் முன்கோபமே தடையாக அமைந்து முட்டுக்கட்டை போடும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிதானமாகப் பேசவும். இறைவழிபாடு மன அமைதியை நல்கும்.

– Advertisement –

மிதுனம்

இன்றைய தினம் லட்சுமி கடாட்சம் பொங்கும் நாளாகும். வருவாய் பெருகி, தேவைக்கேற்ப பொருள் கையில் இருக்கும். எதிர்காலச் சேமிப்பிற்கு பிள்ளையார் சுழி இட உகந்த நாள். சுப பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வேலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். புதிய பணி தேடுபவர்களுக்கு மனதிற்கினிய வேலை கிட்டும்.

கடகம்

சிறு மனபயமும், பதட்டமும் தென்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நலம். அன்றாடப் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். கால விரயத்தைத் தவிருங்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

– Advertisement –

சிம்மம்

திறம்படச் செயல்படுவீர்கள்; தெளிவுடன் சிந்திப்பீர்கள். சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிறருக்கு உதவும் மனப்பக்குவம் மேலோங்கும். உற்றார் உறவினர்களுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் மறையும். பணியிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும்.

கன்னி

சவால்கள் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படலாம். பணியிலும் வியாபாரத்திலும் சற்றே பின்னடைவு ஏற்படக்கூடும். தேவையற்ற கோபத்தைத் தவிருங்கள். காலத்தை வீணாக்காதீர்கள். பிறருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இறைவழிபாடு மன அமைதியைத் தரும். நற்காரியங்கள் நடைபெறும்.

– Advertisement –

துலாம்

மகிழ்ச்சி பொங்கும் நாளாகும். மனதில் ஆனந்தம் குடிகொள்ளும். பணியிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நல்வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறவுகளுடன் நிலவி வந்த இடர்பாடுகள் நீங்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை நல்கும். வீண்விரயச் செலவுகள் கட்டுப்படும்.

விருச்சிகம்

மிகுந்த ஆர்வத்துடன் புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்வீர்கள். இளைஞர்களுக்கு இன்றைய தினம் இனிய நாளாக அமையும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடைகள் அகலும். மனதிற்கினிய கல்வியைத் தொடர நல்வாய்ப்புகள் தேடி வரும். சுப நிகழ்வுகள் உண்டாகும்.

தனுசு

சவால்கள் நிறைந்த நாளாக அமையும். எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும். மனம் தளரலாகாது. தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் துணைக்கொண்டு செயல்படுங்கள்; வெற்றி நிச்சயம்.

மகரம்

மகிழ்ச்சி தரும் நாளாகும். பணியிலும் வியாபாரத்திலும் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கி, வருவாய் சீராகும்; கடன் சுமை குறையும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

கும்பம்

பல நற்காரியங்களைச் செய்யத் துவங்குவீர்கள். ஒழுக்கத்தைப் பேணுவீர்கள். பணியிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். காலத்தை வீணாக்க மாட்டீர்கள். ஒழுக்கமே உங்களை நல்வழிப்படுத்தும்.

மீனம்

ஓய்வெடுக்க உகந்த நாளாக அமையும். பணியிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி காணப்படும். பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். பணியில் நிலவி வந்த மன உளைச்சல் குறையும். பேச்சாற்றல் பெருகும். இளைஞர்களுக்கு இன்று நற்செய்திகள் உண்டு.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online