நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 19 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 19 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று இருமடங்கு மகிழ்ச்சி கூடும் நாள். தொழில், வர்த்தகத்தில் எதிர்பாராத வளர்ச்சி கிட்டும். வருவாய் பெருகும். சேமிப்பைப் பெருக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். வணிகத்தில் லாபம் உயரும். குடும்பப் பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றி, மன நிறைவு பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்று சுகபோக வாழ்வு அமையும். தொழில், வணிகத்தில் உங்களுக்கான முதன்மை நிலை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். இன்று தேவையான நிதி ஆதாரங்கள் கையில் இருக்கும். உறவுகளில் நிலவி வந்த மனத்தாங்கல் அகலும். குடும்பத்தில் ஐக்கியம் ஓங்கும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று பல நற்பலன்கள் கூடும். குடும்பத்திற்குத் தேவையான ஆக்கபூர்வமான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். அதுமட்டுமின்றி, இயலாதவர்களுக்கு உதவும் நற்பண்பும் இன்று வெளிப்படும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்று திறன்கள் மேம்படும் நாளாக அமையும். உங்களது ஆற்றலைக் கண்டு சுற்றியுள்ளோர் வியப்பார்கள். அந்த அளவுக்கு இன்று தேர்ச்சி பெறக்கூடிய நாளாக இது அமையும். எதிர்பாராத நன்மைகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி காணலாம்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்று நலமான நாள். உடல்நலம் சார்ந்த குறைபாடுகள் நீங்கும். குடும்ப உறவுகளில் நிலவி வந்த மனக்கசப்பு அகலும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்ப நலனுக்காக விட்டுக் கொடுத்து வாழ்வதால் ஏற்படும் சுகம், உங்கள் மனதை அமைதிப்படுத்தும். புதிய அனுபவங்கள் இன்று உங்களுக்கு மன அமைதியைக் கூட்டும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று அளவில்லா நற்பலன்கள் கிட்டும். கடன் சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். நிதி நிலை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கான வழிகள் பிறக்கும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று நற்செய்திகள் வந்து சேரும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் இனிதே நடைபெறும். சுப விரயங்கள் ஏற்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். தொழிலில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வேலை தேடுவோர்க்கும் அனுகூலமான தகவல்கள் கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக அமையும். உடன் இருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுதல் அவசியம். புதிய மனிதர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உங்களது கடமைகளைத் தாமே செய்யுங்கள். மற்றவர்கள் கையில் எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம், மிகுந்த கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசியினர் இன்று பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவீர்கள். சங்கடங்களைக் கண்டு அஞ்சாது, எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான தீர்வை தெய்வத்தின் கையில் ஒப்படைத்து, உங்களது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவீர்கள். இந்த நாள் சிறந்த அனுபவங்களை அளிக்கும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசியினர் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்து வைப்பீர்கள். உங்களது பேச்சை மறுக்கும் எவரும் இன்று உங்கள் எதிரே நிற்கவே முடியாது. அந்த அளவுக்கு வார்த்தைகளில் தெளிவு இருக்கும். உங்கள் பக்கம் நியாயமும் இருக்கும். பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இது அதிர்ஷ்டகரமான நாள்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று லாபம் நிறைந்த நாளாகும். தொழிலில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். சேமிப்பைப் பெருக்கலாம். பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு இன்று நற்பலன்கள் கிட்டும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடுவோர்க்கும் அனுகூலமான தகவல்கள் வந்து சேரும்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு உயரக்கூடிய நாளாக அமையும். உங்களது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும். நிதி நிலை சீராகும். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், உங்களது தேவையற்ற பேச்சுகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சைக் குறைப்பது நலம் பயக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online