மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று மனக் கலக்கமும், தேவையற்ற பதற்றமும் சூழ்ந்திருக்கும். கசப்பான கடந்த கால நிகழ்வுகளை எண்ணி வருந்த வேண்டாம். நிகழ்கால கடமைகளில் கவனம் செலுத்துவதே சிறப்பு. பழைய நினைவுகளால், புதிய வாய்ப்புகளையும், அதனால் உண்டாகக்கூடிய மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும். எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று லாபம் பெருகும் நன்னாள். புதிய முதலீடுகளை மேற்கொள்ள உகந்த காலம். வேலை தேடுவோர்க்கு நற்செய்தி காத்திருக்கிறது. ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி, நலம் பெறுவீர்கள். நெடுந்தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் இனிதே தொடங்கும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வருவாய் அதிகரிக்கும் இனிய நாள். வசூலாகாத கடன்கள் வசூலாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியடையும். கணவன்-மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்து சார்ந்த பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு கிட்டும். நீண்ட காலப் பகை நீங்கும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நற்பலன்கள் அதிகரிக்கும். தேவைக்கேற்ப பொருளாதார நிலை சீராக அமையும். விடுமுறை தினம் என்பதால் மனதுக்கு இணக்கமான ஓய்வும், சுவையான உணவும் மகிழ்ச்சியைத் தரும். கணவன்-மனைவி அன்னியோன்னியம் கூடும். சுப விரயங்கள் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்ப்புகள் சற்று மேலோங்கும். எந்தவொரு காரியத்திலும் போராடியே வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும், மன உறுதியை தளரவிடக் கூடாது. குறுக்குவழிகளை நாட வேண்டாம்; பொய்மொழி தவிர்ப்பது நலம். நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று முன்கோபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நிதானம் இழக்க வேண்டாம். நெருங்கிய உறவுகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பயணங்களை இயன்றவரை குறைத்துக் கொள்வது சிறப்பு. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தன் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறுசிறு மறதியால் பிரச்சினைகள் எழக்கூடும். முக்கியமான தகவல்களை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. அவசியமான பொருட்களை முன்னரே சரிபார்த்துக் கொள்ளவும். ஆரோக்கியத்திலும் தனிக்கவனம் செலுத்துவது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகச் சிந்தனைகளில் மனம் லயிக்கும். அவசியமற்ற மனக் குழப்பங்கள் அகலும். மன நிம்மதி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவிய சிரமங்கள் நீங்கி, மன நிறைவு காண்பீர்கள். எதிரிகளின் தொல்லை நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் பொங்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பெயரும் புகழும் பெருகும் நன்னாள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நற்பலன்களில் உங்கள் பெயர் முதலிடம் வகிக்க வாய்ப்புகள் அதிகம். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு சுப விரயங்கள் ஏற்படும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் குடிகொள்ளும் அருமையான நாள். உங்கள் வங்கிக் கணக்கில் தன வரவு பெருகும். இன்று மகாலட்சுமியின் பேரருள் நிறைந்திருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன் சுமை குறையும். சொத்து சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு அவசியம்.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆர்வத்துடன் செயலாற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் அமையும், அவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். மன நிம்மதி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நலம். உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு தேவை.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


